கவிதைத் தொகுப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைத் தொகுப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 டிசம்பர், 2017

அன்று இன்று !

அன்று ஒரு பெண் எங்கோ பிறந்து,வளர்ந்து,கல்வி கற்று,
             வேலைக்கு செல்லமுடியாமல்!
இன்று அவள் திருமணம் முடிந்து பின்  

அவள் இருந்தால் சமையல் அறையில்!!

Related image



நிலா

சித்திரை வானத்தில் முத்து போன்ற உருவம் கொண்டு
                           பளபளப்பாக ஒளி தரும் சந்திரனே!
சிவன் தலைமேல் அரை வடிவமாய் காட்சியளிக்கும் நீ!
                        இனி வரும் காலங்களில் என்ன செய்யப்போகிறயோ!!

சனி, 20 மே, 2017

வெளியே வா...




கோழிக்குஞ்சாக உன்னை
அடைக்காத்தது போதும்..
வெளியே வா ஒரு கழுகு குஞ்சாக..
உன்னை ஒரு வட்டத்தில் சுழலும்
பந்து போல சுழல வைக்க பார்க்காதே..
வெளியே வா சதம் அடிக்கலாம்..
மனிதன் என்ற  ஆணுக்குள் உன்னை சிறைப்பிடித்ததை மறந்திடு..
வெளியே வா மனிதியாக..
பெண்ணே உன் பெண்மை எனும் சிறகுகளை வலிமையாக்கி
விண்ணில் பறக்கலாம் வெளியே வா..
இன்னும் உன்னை அறியாமை என்ற நிலைக்குள் தள்ளி விடாதே..
ஆணுக்கு நிகராக பெண்களும் வளர்ச்சி அடைந்து வரும் தலைமுறையில்
தான் நீ  இருக்கிறாய்..
அன்று நம் பாரதி கண்ட கனவை
இன்று நிறைவேற்றலாம் துணிவோடு.. நிமிர்ந்த நன்னடை கொண்ட பெண்ணாக வெளியே வா நீயாக..
சுதந்திர உலகில் நீ மட்டும் ஏன் உன்னை விடுதலை செய்ய மறுக்கிறாய்..
பேதைமை விடுத்து வெளியே வா..
வாகை சூடலாம் பெண்ணே..
வெளியே வா..

வியாழன், 6 ஏப்ரல், 2017

என் கல்லூரி பயணம்

    

முதல் நாள் கல்லூரி பயணத்தில்
எங்களுக்குள் இருந்த்து ஏதோ ஒரு கருத்து வேறுபாடு
ஆனால் இன்றோ !.......
கல்லூரி பயணம் என்றோ
ஒர் நாள் முடியத்தான் போகிறது.
ஆனால் எங்கள் உறவு என்னும்
பயணத்திற்கு முடிவே இல்லை
ஆண்டு ஒரு முறை மட்டும்


தமிழ் நாடு




புல்லினங்கள் வந்தாட
பூமரங்கள் அசைந்தாட
பெண்மயிலும் சேர்ந்தாட
பேதை மனம் கூத்தாட
பொன் விளையும் நாடான – என் தமிழ்நாடு

போன திசை அறியேனோ...

காற்று



             
                              
நீரோடையில் ஓடிவிளையாடும்
குழந்தைகளுக்குத் தெரியுமா?
நாம் விஷக்காற்றை சுவாசிக்கிறோம் என்று
நாம் எப்போது இயற்கை காற்றை சுவாசிப்போம்
மரங்களை வெட்டுவதை நிறுத்தி விட்டு
வளர்க்கத் தொடங்கினால் மட்டுமே
இயற்கைக் காற்றை சுவாசிப்போம் .........!   

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினால்
காற்று இறுகியது
குப்பைகளை கொட்டி எரிப்பதினால் புகை –ஆனது
காற்றியில் கலக்கும் போது நோய்வாய்ப்படுகிறது.
புகை பிடிப்பதினால் காற்று ரணமானது.
எப்படி சுவாசிப்பது ?
நுரையீரல் இப்போது இரும்பினால் வேண்டும் எனக்கு .
சுவாசிக்கும் காற்றே விஷம் ஆனால்
தொட்டில் கூட கல்லறையாக மாறிவிடும் .
அடுத்த நூற்றாண்டு மனிதன் இருப்பனோ இல்லையோ ?
இனியவது  மரங்கள்  ஊன்றி  தூய்மையான
காற்றை சுவாசிப்போம் .
வாழ்வதற்க்கு உணவு எவ்வளவு முக்கியமோ –அது போல்தான்                       
சுவாசிப்பதற்க்கு காற்று முக்கியமான ஒன்றாகும்.
     

   
          

              

அப்பா

                         



தாய் என்பாள் குழந்தையை கருவில் பத்துமாதம் மட்டுமே
சுமந்து பெற்று எடுப்பாள்  -ஆனால்
தந்தை  என்பவர்  உணர்வுகளை கொண்டு
பல கனவுகளோடு குழந்தையை  தோள்களில் சுமந்து செல்வர் தந்தை

தந்தை என்பவர் இன்பங்களை மட்டுமே
மாற்றவர்கள் இடம்  பகிர்ந்துக் கொள்வர் –ஆனால்
துன்பங்களை அவர் மனதில் வைத்து புதைத்துக் கொள்வர்
அவர் விடும் கண்ணீர் துளிகள் கூட மாற்றவர்களுக்கு
தெரியாமல் போய்விடும்

அவர் நமக்காக  சிந்தும் வியர்வை துளிகளும்
நமக்காக விடுமும் கண்ணீர்த் துளிகளுக்கு கூட ஈடுகட்ட முடியாது
ஆழ் கடல்போல் அன்பை காட்டி வழி நடத்தியவர்
என் தந்தை

என் தாயையும் சேர்த்து என்னையும் தன் நெஞ்சில் சுமந்தவர்

என் தந்தை  அன்பால் வென்றவர் . 

கண்கள்..

            


வட்ட மான முகத்தில்
     முட்டைக் கண்கள் உள்ளன
முட்டைக் கண்கள் நடுவிலே
     வட்டப் பொட்டு இருக்கிறதே
கறுப்புப் பொட்டு கண்ணிலே
     காண மிகவும் உதவுதே
கறுப்பு விழுகள் பாதித்தால்
     கண்கள் பார்வை இழக்குமே
கிட்ட உள்ள பொருள்களைக்
     கண்டு அறிய உதவுமே
எட்ட இருக்கும் பொருள்களை
     எண்ணிப் பார்க்க உதவுமே
புதுமை யான உலகினைப்
     பார்த்து ரசிக்கும் கண்களைச்
சொத்து போல காத்து நாம்
     சொர்க்கம் போல வாழுவோம்
கண்கள் இரண்டும் மணிகளே
     கடவுள் தந்த விழிகளே
கண்கள் காத்து வாழுவோம்

     காலம் முழுதும் மகிழுவோம்.

கிராமத்தின் உயர்வு நாட்டின் உயர்வு...




என்னுடைய உண்மையான உழைப்பு,
என் கிராமத்தின் உயிர் கொடுக்கும்.
     எங்கள் கிராமங்கள் உயர்ந்தால்,
எங்கள் குடும்பங்கள் நல்வாழ்வு கிடைக்கும்.
     எங்கள் குடும்பங்கள் சிறப்பாக வாழ்ந்தால்,
எங்கள் மாநிலம் உயரும்.
     எங்கள் மாநிலம் உயர்ந்தால்,
எங்கள் நாடு வளமான நாடாகப் பரிணமிக்கும்.
     நாம் உழைத்து கிராமத்தை, மாநிலத்தை,

இந்திய நாட்டை உயர்த்துவோம்.

வாழ்க்கை ஒரு பரிசு..





வாழ்க்கை ஒரு பரிசு       
          அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு சாகப் பயணம்  
            அதைப் மெற்க் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு வினோதம் 
           அதை கண்டறியுங்கள்

வாழ்க்கை ஒரு காதல்      
           அதை அனுபவியுங்கள்

வாழ்க்கை ஒரு பாடல்   
          அதை பாடுங்கள்

வாழ்க்கை ஒரு அழகு     
          அதை ரசித்துப் பாருங்கள்

வாழ்க்கை ஒரு உணர்வு 
          அதை உணர்ந்துக் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு கடமை  
          அதை நிறைவேற்றுங்கள்


வாழ்க்கை ஒரு துயரம்    
          அதை தாங்கிக் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு பயணம்  
         அதை முடிக்கப்பாருங்கள்

வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்
           அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு போராட்டம் 
           அதை எதிர்க் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு உறுதி
          அதை இறுதி வரை காப்பாற்றுங்கள்

வாழ்க்கை ஒரு சவால்
         அதை சந்தியுங்கள்

வாழ்க்கை ஒரு குழப்பம்
          அதை விடைக் கானுங்கள்

வாழ்க்கை ஒரு இலக்கு
         அதை எட்டி பிடியுங்கள்

வாழ்க்கை ஒரு சுவாசம்
         அதை சுவாசிங்கள்




மாற்றம் ஒன்றே மாறாதது...




விதையின் மாற்றமே வேர்...
நேற்றைய மாற்றமே இன்று...
சேமிப்பின் மாற்றமே முதலீடு...
அறியாமையின் மாற்றமே அறிவு...
தோல்வியின் மாற்றமே வெற்றி...
துன்பத்தின் மாற்றமே இன்பம்...
இரவின் மாற்றமே பகல்...
கோபத்தின் மாற்றமே அன்பு...
ஒலியின் மாற்றமே இசை...
நட்பின் மாற்றமே காதல்...
அழுகையின் மாற்றமே சிரிப்பு...
கருவறையின் மாற்றமே கல்லறை...
குழந்தையின் மாற்றமே மனிதன்...
நம்பிக்கையின் மாற்றமே தன்னம்பிக்கை...
கல்வியின் மாற்றமே நாட்டின் வளர்ச்சி...
முடியாதென்பதன் மாற்றமே முடியும்...

இப்படி பல மாற்றங்களுக்கு பிறகே நமது வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும்.எனவே தங்களின் நேரத்தின் ஒவ்வாரு நொடியிலும் நிகழ இருக்கும் மாற்றங்களுக்கு தயாராக இருங்கள்..

சனி, 4 பிப்ரவரி, 2017

உழவனுக்கு உயிர்கொடுப்போம்!



சுழலப்பட்டபம்பரமாய் உலகம்!

 அதில்

சுழற்றி இழுக்கப்பட்டசாட்டையாய் மனிதவாழ்வும்!

ஓடுகிறோம்..... ஓடுகிறோம்... 

உலகம் இயங்கும் வேகத்தில் இன்று!

மறக்கிறோம்! மறக்கிறோம்! 

உணவுஉழவனின் காலடியில் என்று!

வியர்வை சிந்திஉழைக்கின்றான் உழவன்

 உலகிற்காக சேற்றில்!

அவன் படும் இன்னல்கள் மறந்து!

பசி ஆறுகிறோம்

 அவன் தரும் சோற்றில்..

ஒடுங்கிப்போனஅவன் உடலில் 

ஒருதுளியேனும் இரத்தமில்லை..

காரணம் 

விளைச்சலுக்கு அவன் சிந்தியது வியர்வைத் துளிகள் அல்ல 

அவனது இரத்தத்துளிகள்..

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்

இவ்வரிகளுக்கு ஏற்றவன் உழவன் என்றே கூறலாம்

இனிப்பான கனிகளில் வேர்களின் வேதனைதெரிவதில்லை!

நாம் மகிழ்ந்துண்ணும் உணவில் உழவனின் சாதனைபுரிவதில்லை

காலங்கள் மாறினாலும் கலாச்சாரம் மாறமுயன்றாலும்

உலகம் என்னவோஉழவனின் பிடியில்

மனித உயிர்களுக்குஉணவிட்டும் உழவனின் 

வாழ்வென்னவோ மரணத்தின் பிடியில்

விளைச்சலுக்கும் உரம் போதவில்லையோ என்னவோ..??

தன் உடலையும் 

மண்ணிற்குள் புதைக்காமல் விதைக்கிறான் உழவன்!

முடியட்டும் உழவனின் தற்கொலை மரணம்

விடியட்டும் உழவர் தலைமுறையின் ஜனனம்..


மு.தமிழ்மணி
  
மூன்றாம் ஆண்டுவேதியியல் துறை.