சனி, 2 டிசம்பர், 2017

பெண் காமத்துக்கா.? காதலுக்கா.?




India's daughter documentary film..

இன்று தான் இந்த குறும்படத்தை பார்த்தேன்.என்னுள் அடக்க முடியாத அளவுக்கு கோபமும் தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு கோபம் கலந்த கண்ணீருமே இந்த பதிவுக்கு காரணம்.

பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு. ஆனால்  அவளை காமப் போதைக்கு ஊறுகாயாகப் பயன்படுத்துவது தனது அம்மாவை விற்றுக் குடிப்பதற்கு சமம். இதற்கு காரணம் யார். ? ஒரு குழந்தை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னையின் வளர்ப்பு தான் என்று நாம் யாவரும் அறிவோம். ஆனால்  ஒரு குழந்தையின் வளர்ப்புக்கு அன்னையை தவிர இன்னும் சிலருக்கு பங்கு உண்டு. ஆம் அது அந்த குழந்தையின் தந்தை அவரை அடுத்து அவளது ஆசிரியர்கள் இவர்கள் மூவரின் வளர்ப்பில் தான் ஒரு குழந்தை வளரும்.கல்வி இல்லாத குழந்தைகளும் இந்த சமூகத்தால் வளர்க்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் லட்சுமி குறும்படம் நம்மை கோவத்திலும் சிந்திக்க வைத்தது.ஒரு சராசரி  அலுவலகம் சென்று நடுத்தர வாழ்க்கையை நடத்தும் பெண்ணை குறித்து இருந்தது.

இந்த  இரண்டு குறும்படத்தையும் பார்த்த பிறகு தான் எனக்கு புரிந்தது ஒவ்வொரு பெண்ணையும் தசையாக மட்டுமே பார்க்கும் ஆண்களுக்கு மத்தியில் ஒரு இலட்சுமி உருவாக்கப்படுகிறாள். உணர்வுகளையும் அன்பையும் சேர்த்து ஒரு ஆண் பெண்ணை நெருங்கும் போது அவள் தாய்மை அடைகிறாள். ஆனால்  அதே பெண்ணை வெறும் காமத்தோடு மட்டும் நெருக்கடி கொடுக்கையில் அவள் விலைமகளை விட இழிவான நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

பெண்ணியம் பற்றி இன்று நிறைய பேசுகிறோம். பெண்ணின் சுதந்திரம் அவளிடம் உள்ளது ஆனால் சில பெண்களின் சுதந்திரம் சமூகத்தை சார்ந்தே உள்ளது. பெண்மையை சதையாகவும் ஆண்மையை தவறாகவும் சித்தரிக்கும் ஊடகங்களின் விளைவும் ஆசிரியர்களின் கவனக் குறைவும் தான் இதற்கு காரணம் என்பது எனது கருத்து. ஆம் ஆசிரியர்களை நான் குறிப்பிடுவதற்கு காரணம் பாலியல் என்பது உடலை மட்டும் அல்ல உணர்வுகளையும் குறித்தது.

பெரும்பாலும் அறிவியல் பாடத்தில் பாலியல் குறித்த விவரங்களை அடக்கிய பாடங்களை கற்றுத் தரும்  ஆசிரியர்கள்  அதனை மேற்கொள்ளும் போதே சீ... ஐ..யோ... என்றும் அதனை மாணவர்களுக்கு எடுக்க கூச்சப்படுவதால் தான் அவர்களுக்கு பாலியல் என்றாலே பெரும் குற்றாமகவும் பெண்களிடம் தான் அதனை அடைய முடியும் அதற்காக அவர்களை பயன்படுத்தலாம் என்ற தாக்கமும் ஆண்கள் மத்தியில் ஏற்படுகிறது ( ஒரு சில ஆண்களுக்கு  மட்டும் ) என்பது எனது கருத்து.

பெண்களை போற்றும் பெண்ணியம் தான் வேண்டும்.. பெண்களின் சுதந்திரம் அவளிடம் தான் உள்ளது.. கல்வியின் மூலம் தான் தீர்வு காண முடியும்.. இன்று பெரும்பாலும் இணையத்தில் தான் உலவுகிறோம். சினிமாவிலும் சரி, விளம்பரத்திலும் சரி, படுக்கையறை காட்சிகளை  ஆபாசமாக காட்டுவதே இதற்கு முக்கியக் காரணம். முத்தக் காட்சியில் ஆரம்பித்து பாலியல் வரை அனைத்தும் ஒவ்வொரு சிறுவர்களையும் பாதிக்கிறது. இரண்டு வயது சிறுவன் முதல் கட்டையில் போகும் மனிதன் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த மாதிரியான காட்சிகள்.

இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பெற்றோர்களும் தனது குழந்தைகளின் முன்பு சண்டைகள் மட்டுமின்றி பாலுறவு வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இன்றைய குழந்தைகளுக்கு வீட்டில் கற்று தரும் பாடத்தை விட இணையத்திலும் சமூகத்திலும் கற்று கொள்ளும் பாடமே அதிகம்.

ஆசிரியர்கள் மட்டும் இதை கற்றுத் தர வேண்டும் என்று இல்லை.  பெற்றோர்களும் தனது குழந்தைகளுக்கு ஆண் பெண் உடலமைப்பு, ஹார்மோன் மாற்றங்கள், ஆண் பெண் வித்யாசம், ஆண் பெண் பருவமடைதல் மற்றும் உடலுறவு பற்றிய விழிப்புணர்வை போன்ற நல்ல முறைகளை சொல்லிக் கொடுத்து வளர்க்கவும்.

இன்னும் எழுதவே நினைக்கிறேன்.. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதும் ஆச்சிரியக்குறி வைப்பதும்  ஒவ்வொருவரின் மனதில் தான் உண்டு..

12 கருத்துகள்:

  1. தங்கள் உள்ளக் குமுறலைக் காணமுடிகிறது. உண்மையில் சமூகம் இதனைக் கருத்தில் எடுக்குமா? காரணம் பெண்ணைக் காமப்பொருளாகவும் கவர்ச்சிப் பொம்மைகளாகவும் அன்றைய சமூகமும் இன்றைய சினிமாவும் துாக்கிப் பிடிப்பதால் இந்த நிலை!
    பெண் விடுதலை என்பது இந்த நிலையில் மாற்றம் வந்த பின்னரே கிட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஐயா.கூத்தாடிகளின் அலட்சியமும் இதற்கு காரணம்தான் ஐயா.

      நன்றி.

      நீக்கு
  2. வைசாலி உங்கள் கருத்துகள் அத்தனையும் சரியே! எங்கள் கருத்தும் அதுவே! கல்வி அறிவு பெற்ற பெற்றோரே பல சமயங்களில் இதைச் சொல்லிக் கொடுக்காத போது அந்த அறிவு இல்லாதவர்கள், அதுவும் மூடப் பழகக்வழக்கங்களில் சிக்கியிருக்கும் பெற்றோர் எப்படி இதைச் சொல்லிக் கொடுக்க முடியும் என்று தெரியவில்லை. அவர்கள் கிராமங்களில் இருந்தாலும் சரி, நகரங்களில் இருந்தாலும் சரி...நல்லதொரு பதிவு..இதைப் அப்ற்றி நிறையப் பேசலாம் தான்...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு. இன்றைய பெண்களுக்கு கல்வி அறிவு ாேதிப்பது அவசியம் ோல ஆண்களுக்கு பெண்னை பெண்ணியத்துடனும் கண்ணியத்துடனும் நடத்த கற்றுதர வேண்டியது ஒவ் ொரு பெற்றோருடைய கடமை

    பதிலளிநீக்கு
  4. நல்ல பகிர்வு. நிறைய மாற்றங்கள் தேவை.

    பதிலளிநீக்கு