Skip to main content

Posts

Showing posts from November, 2017

சாணக்கியா 2017

அன்புடையீர் வணக்கம்,
இந்த வருடத்திற்கான சாணக்கியா தேடல்.கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பில் ஒவ்வொரு வருடமும் சாணக்கியா என்ற தலைப்பில் வணிக வினாடி வினா மற்றும் சிறந்த மேலாளர் போன்ற  போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 14,2017அன்று சாணக்கியா நடைபெற உள்ளது.இதில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை.அனுமதி இலவசம். பங்கேற்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழும் உண்டு.மேலும் பார்வையாளர்களுக்கும் சிறந்த பரிசு உண்டு. வணிகவியல் சார்ந்தும் சாராமலும் அனைத்து பாடப்பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.
பெண்கள் வணிகத்திலும் சாணக்கியர் தான் என்பதை நிரூபிக்க சிறந்த ஒரு வாய்ப்பாக அமைய  உள்ளது.ஆர்வமுள்ள கல்லூரி மாணவிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் தொடர்புக்கு, ஆர்.வாசுகி - 8807473229 (வணிகவியல் துறைத்தலைவர்)


செயற்கை நுண்ணறிவுத்திறனும், தமிழ் கற்றல்,கற்பித்தல் நுட்பங்களும்

கனடாவில் 7-9 அக்டோபர் 2017 நடைபெற்றஇணையமாநாட்டில் வழங்கிய கட்டுரை......
     மனிதர்களின் அறிவை இயற்கையான அறிவு, செயற்கையான அறிவு என வகைப்படுத்த இயலும். குலவித்தைகற்றுப்பாதி,கல்லாமற்பாதிஎன்ற பழமொழி கூட இக்கருத்தையே எடுத்துரைக்கிறது. இதையே வழக்கில் தன்னறிவு, சொல்லறிவு எனவும் கூறுவதுண்டு. மனிதர்களுக்கு எப்படி கல்வி என்ற முறை செயற்கையாக தம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுகிறதோ அதுபோல, கணினி அல்லது இயந்திரங்கள் ஆகியவற்றைவைத்துக்கொண்டுஅவற்றுக்குக் கற்பித்தல் வழியாக நுண்ணறிவைஉருவாக்குகின்றமுறையே செயற்கை நுண்ணறிவுத்திறன் (Artificial Intelligence) என்று அழைக்கப்படுகிறது.மனிதர்களுக்கு

பன்னாட்டுக் கருத்தரங்க அறிவிப்பு

கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை இணைந்து நடத்தும் மூன்றாமாண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம். தலைப்பு - தமிழ் ஆங்கில இலக்கிய ஒப்பாய்வுக் களங்கள்
கருத்தரங்க நாள் - 12.12.2017

கட்டுரை வழங்க இறுதி நாள் - 15.11.2017
தொடர்புக்கு - 9894829151 தாங்கள் கட்டுரை வழங்கி கருத்தரங்கை சிறப்பிக்குமாறு 
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



குளம் குட்டை ஏரி

அன்றோ....
எனக்கான
இடத்தை
நீ
ஆக்கிரமிப்பு
செய்தாய்....!!!
இன்றோ...
நானே
மீண்டும்
ஆக்கிரமிப்பு
செய்தேன்....!!!
சாதாரண
தண்ணீராக
அல்ல...
வெள்ளமாக........

# குலம் குட்டை ஏரி #

-----மு. நித்யா.

இயற்கை

எண்ணி
விடாதே,,,
நீ
எனக்கெதிராக
செய்வதை
தாங்கி
கொண்டிருக்கிறேன்
என்று...
தாங்க
முடியாது
ஒரு நாள்,,,,
உனக்கெதிரான
என்
சீற்றத்தை...

# இயற்கை #

-----மு. நித்யா.