சனி, 20 மே, 2017

வெளியே வா...




கோழிக்குஞ்சாக உன்னை
அடைக்காத்தது போதும்..
வெளியே வா ஒரு கழுகு குஞ்சாக..
உன்னை ஒரு வட்டத்தில் சுழலும்
பந்து போல சுழல வைக்க பார்க்காதே..
வெளியே வா சதம் அடிக்கலாம்..
மனிதன் என்ற  ஆணுக்குள் உன்னை சிறைப்பிடித்ததை மறந்திடு..
வெளியே வா மனிதியாக..
பெண்ணே உன் பெண்மை எனும் சிறகுகளை வலிமையாக்கி
விண்ணில் பறக்கலாம் வெளியே வா..
இன்னும் உன்னை அறியாமை என்ற நிலைக்குள் தள்ளி விடாதே..
ஆணுக்கு நிகராக பெண்களும் வளர்ச்சி அடைந்து வரும் தலைமுறையில்
தான் நீ  இருக்கிறாய்..
அன்று நம் பாரதி கண்ட கனவை
இன்று நிறைவேற்றலாம் துணிவோடு.. நிமிர்ந்த நன்னடை கொண்ட பெண்ணாக வெளியே வா நீயாக..
சுதந்திர உலகில் நீ மட்டும் ஏன் உன்னை விடுதலை செய்ய மறுக்கிறாய்..
பேதைமை விடுத்து வெளியே வா..
வாகை சூடலாம் பெண்ணே..
வெளியே வா..

10 கருத்துகள்:

  1. அருமை....இன்னும் முயற்சி செய்யுங்கள் வைசாலி....மெரு கேற்றுங்கள்.....உங்கள் கவித்திறனை... வாழ்த்துகள்...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. எழுச்சியூட்டும் கவிதை
    மிகவும் இரசித்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு