வியாழன், 6 ஏப்ரல், 2017

பெண் குழந்தை வேண்டாம்.




என் சின்னஞ்சிறு கண்மணிக்கு,

உன்னை எவ்வாறு நான் பாதுகாப்பேன்.. உன்னை நான் எதை கொண்டு
மறைப்பேன் ..,எந்த ஆடை உடுத்தி அழகு பார்பேன்..உன்னை நான் எங்கு
விளையாட விடுவேன்..,எந்த பள்ளிகூடம் பாதுகாப்பானது என்று அனுப்புவேன்..,உன்னை மாமன், நண்பன் என்று யாரை நம்பி அனுப்புவேன்..,
இந்த பொல்லா உலகில் உன்னை எவ்வாறு பாதுகாப்பேன்?

ஆண்மகனே ( சில) எப்படி இவ்வாறு மாறி போனாய்? உன்னை எளிதில்
வந்தடையும் சீர்கெட்ட ஊடகங்களா..?

தாயாக கலங்குகிறேன் உன்னை எவ்வாறு பாதுகாப்பேன் என்று..?

கடவுளே மகள் வேண்டாம் என்றால், எனக்கு குழந்தையே வேண்டாம்.

18 கருத்துகள்:

  1. வருக அம்மா.தங்களின் தமிழ் எழுத்துகளை அன்புடன் வரவேற்கிறேன்.
    நல்ல சிந்தனையோடு தொடங்கியுள்ளீர்கள் தொடருங்கள் தொடர்கிறேன்.வாழ்த்துகளும் பாராட்டுகளும் அம்மா.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் மன வலி புரிகிறது சகோதரி.
    ஆனாலும் உங்கள் தலைப்பே வலிதருகிறதே! வேண்டாம்மா..
    “இன்னாது அம்ம இவ்வுலகம்,
    காண்க இதன் இயல்புணர்ந்தோரே!” என்று 2000ஆண்டுகளாக எழுதி வரும் நாடுதான் நமது.
    நம்பிக்கையோடு இருப்போம். நன்றி

    பதிலளிநீக்கு
  3. வணிகவியல் பேராசிரியரான தாங்கள் தமிழில் தங்கள் கருத்தை வெளியிடுவதற்கு எனது வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

    தங்கள் பதிவில் வலியை உணர்ந்தேன்.

    போராட்டம் இல்லாத உயிர்கள் என்று ஏதும் இந்த உலகில் இல்லை!

    போராட்டம் தான் நாம் வாழ்வில் திடமுடன் வாழத் துணைநிற்கும்!

    ஒரு விதை மரமாவதற்கு எத்தனை இடர்பாடுகளை சந்திக்கிறது!

    அதிலும் நாம் வீட்டில் வளர்க்கும் மரங்களையும் காட்டில் வளரும் மரங்களையும் ஒப்பிட்டுப் பாருங்களேன்..

    அந்த விதையின் போராட்டத்தைவிடவா நாம் வாழ்வில் சந்திக்கிறோம்.

    சாலையில் ஏற்படும் விபத்துக்கள் போலத்தான் இன்று பெண்கள் சந்தித்துவரும் சமூக அவலங்களும்..

    சாலை பாதுகாப்பு விதிகளை அறிந்திருந்தாலும், பாதுகாப்புடன் பயணித்தாலும் கூட சில நேரங்களில் விபத்து நேர்ந்துவிடுகிறது அல்லவா.. அது போலத்தான் நம் வாழ்வின் தடைகளும்.

    பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு
    முதல்காரணம் அவர்களின் பெற்றோர்!
    இரண்டாவது காரணம் ஆசிரியர்கள்!
    மூன்றாவது காரணம் நட்பு! இந்த மூன்றும் சரியாக இருந்துவிட்டால்.. சமூக அவலங்களில் அந்தப் பெண்கள் எந்த தடைகளையும் தன்னம்பிக்கையுடன் கடப்பார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது பேராசிரியரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி்.
      நான் கண்ட நிகழ்வு இன்றும் என்னால் ஜிரணம் செய்ய முடியாத ஒன்று ,பேருந்து நிலையத்தில் ஒரு பள்ளி சிறுமி மிக அவசரமாக சென்று கொண்டு இருந்தாள் ஒரு நாற்பது வயது ஒத்த ஒரு ஆண்மகன் கண் இமைக்கும் நேரத்தில் தவறாக நடந்து கொண்டான்.அந்த சிறுமி நிலை குலைந்து நின்றாள்.
      இப்படி பல அசபாவிதங்கள் நிறைய கேட்கிறோம். முன்பு இச்சமுதாயாம் இப்படி இல்லையே, சுற்றதாரை சகோதர சகோதரியாக ,சித்தப்பாவாக ,மாமாவாக நண்பனாக பாவித்து அல்லவா நான் வளர்ந்தேன்.
      இன்று என் மகளை தெரியாத பேருந்து நிலையத்திலோ இரயில் நிலையத்திலோ சகோதரியாக ,மகளாக ,தோழியாகவோ இந்த சமுதாயம் நடத்துமா.
      இதுவே ஒவ்வொரு மகளை பெற்ற தாய் மனத்தில் ஏற்படும் பேரச்சம்.

      இந்தியா எனது நாடு. இந்திய மக்கள் எல்லாம் எனது சகோதர சகோதரிகளே. இந்நாட்டை பேணிக்காப்பேன்...

      இந்த உறுதிமொழி என்ன ஆயிற்று...,,?

      பெண்கள் தன்னம்பிக்கை அற்றவர்களோ போராட தயங்கியவர்களோ இல்லை.
      யாரோடு போராடுவது என்பதே கேள்வி..?

      நீக்கு
    2. தங்கள் மனநிலையை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது பேராசிரியரே. ஆனால் இதற்கு யாரைக் காரணம் சொல்வது..?

      எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்!
      அக்குழந்தை நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்று தானே சொல்கிறார்கள்.

      மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்தைக்கூட நான்காவதாக சொல்லி மாதா என்று தாயை முதலில் நம் முன்னோர் சொன்னதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.

      * யானைகள் வாழும்
      பூமியில் தான்
      எறும்புகளும் வாழ்கின்றன!

      * பூனைகள் வாழும்
      வீடுகளில் தான்
      எலிகளும் வாழ்கின்றன!

      * புலிகள் வாழும்
      காடுகளில் தான்
      மான்களும் வாழ்கின்றன!

      * சுறாக்கள் வாழும்
      கடலில் தான்
      சிறு மீன்களும் வாழ்கின்றன!

      * பாம்புகள் வாழும்
      வயல்களில் தான்
      தவளைகளும் வாழ்கின்றன!

      * பாறைகள் கிடக்கும்
      பாதையில் தான்
      நதிகளும் பாய்கின்றன!

      * ராஜாளி பறவைகள்
      வலம் வரும் வானில் தான்
      சின்னப் பறவைகளும்
      சிறகடிக்கின்றன!

      * சவால்கள் இல்லையென்றால்
      சாரமில்லை...
      வாழ்க்கை என்பது
      சூதாடிப் பெறுவதல்ல;
      போராடிப் பெறுவது!

      என்பார் — இளசை சுந்தரம்,

      போராட்டம் தான் வாழ்க்கை!
      போராட்டம் இல்லையென்றால் நமக்குப் பிறப்பே இல்லை.

      நீக்கு
  4. பேராசிரியை தமது உள்ளக் கிடக்கையை தெளிவுடன் வெளிப்படுத்தியுள்ளார். வாழ்த்துகள்.
    ஒற்றுப் பிழைகள் மலிந்துள்ளன.

    அதனை கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்கள் நிவிர்த்தி செய்யலாம்.

    மாணவர்கள் தங்கள் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்திக் கொள்ள அம்மொழியில் வலைப்பதிவுகளை உருவாக்கவும் அவர்களை ஊக்குவிக்க வேண்டுவது அவசியம்.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தினை வரவேற்கிறோம் ஐயா. தற்போதுதான் தமிழில் தட்டச்சு செய்து உள்ளீடு செய்கிறார்கள். அதனால் எழுத்துப்பிழைகள் தவிர்க்க இயலததாகிறது. திருத்திக்கொள்கிறோம் ஐயா. தங்கள் மேலான அறிவுரைக்கு நன்றிகள்.

      நீக்கு
  5. முனைவரது கருத்துகள் பயனுள்ளவை.நன்றி.

    பதிலளிநீக்கு
  6. நம்பிக்கையின் நாட்கள் வரும் தோழி

    பதிலளிநீக்கு
  7. சவால்கள், போராட்டம், இன்பம், துன்பம், மன உளைச்சல் யாவும் மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவை. இவற்றைச் சமாளிக்க 'இருவினையொப்புத்தான்
    தீர்வு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் மேலான கருத்துரைக்கு நன்றிகள் ஐயா.

      நீக்கு
    2. , ஐயா, ஒரு சிறு விளக்கம் பெற விரும்புகிறேன்.
      எங்கள் நாட்டில் ஈவேரா பெரியார்
      சீடர்கள் சிலர், 'ஐயா' என்னும் சொல்லை'அய்யா' என எழது
      கின்றனர்.
      எழுத்துச் சீரமைப்பைத் தொடர்ந்து ',ஐ' என்னும் எழுத்து இன்னும் வழக்கில்தானே இருந்து வருகிறது?குறது

      நீக்கு
    3. ஐயா தங்கள் கேள்விக்கு இந்த இணைப்பில் உள்ள சிந்தனைகள் பதிலாக அமையும் என்று கருதுகிறேன்..

      http://oomaikkanavugal.blogspot.com/2015/04/3.html

      நீக்கு
    4. உங்கள் உதவிக்கு நன்றி. மிகத் தெளிவான விளக்கம் பெற்றேன்.

      சித்திரையா அல்லது தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு என்னும் விவாதம்/ சர்ச்சை எங்கள் நாட்டில் இன்னும் தொடர்கிறது. அறிஞர் பெருமக்களின் கருத்துகளைத் தாங்கிய வலைப்பதிவுகள் ஏதேனும் இருப்பின், தெரிவிக்க வேண்டுகிறேன்.


      நீக்கு
    5. மகிழ்ச்சி ஐயா.

      Vidiyal Puthusu : "Thennan Meiman" about separation of Tamil calendars | 10.04.17

      இந்த இணைப்பில் தென்னன் மெய்ம்மன் என்ற பதிவர் தங்களுக்குக் கிடைப்பார். அவர் எனது மாமா. அவர் தமிழ்ப்புத்தாண்டு குறித்து நிறைய ஆராய்ச்சி செய்து வருகிறார் ஐயா.

      நீக்கு
  8. முனைவரது கருத்துகள் பயனுள்ளவை.நன்றி.

    பதிலளிநீக்கு
  9. Whatever you said is exactly correct mam. This is the current situation for the girls especially those living in our country.

    Being a women I would like to suggest few tips to protect ourselves.

    In order to reduce the crime rate against women,

    ->Being a girl ,we must learn few self protecting techniques like karate
    ->Obey and respect parent words
    ->Build your inner confidence to face the problems
    ->Be bold against the harassment
    ->Use all the social media's in a proper and secured manner
    ->Do not talk to the unknown people unnecessarily
    -> Be cautious & behave in a public places

    Be proud to be a women.

    Thank you.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களின் பாதுகாப்புக்காக தாங்கள் கூறிய அறிவுரைகள் யாவும் சிறப்பானவை. நன்றி பேராசிரியரே.

      நீக்கு