வியாழன், 6 ஏப்ரல், 2017

பொன்மொழிகள்.....





  •  வற்றி போனால்தான், கிணற்றின் அருமை தெரியும். பிராங்க்ளின்.
  •  தொழில் இல்லாத கல்வி, நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது. போவீ. 
  •  வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதேபோல வாழ்வில், உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது. அரிஸ்டாட்டில். 
  • நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!- நெப்பொலியன் ஹில் 
  • தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.- கன்ஃப்யூஷியன்
  • மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.- டாக்டர்ஜான்சன் 
  • உடைமையில் உரிமை கோருவது அல்ல அன்பு. உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு கொள்வதன் பொருளாகும்- ஸ்ரீ அன்னை
  • கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!- சுபாஷ் சந்திரபோஸ்.
  • நீ என்ன நினைக்கிறாயோ அது உன்னால் இயலாமல் போகும்போது உன் ரத்தத்தில் ஜனித்த ஜீவன் அதைச் சாதித்துக் காட்டிவிடும்- கிரந்தம்.
  • பிறர் பாரத்தை தாங்க கை கொடுத்தால் நம் பாரத்தின் கனம் தானே குறைந்துவிடும் -அவ்பரி. 
  • கவலை நம் சவப்பெட்டிக்கு ஓர் ஆணி சேர்க்கிறது. கலகலவெனும் சிரிப்பு ஓர் ஆணியை கழற்றுகிறது -பீட்டர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக