Thursday, 6 April 2017

சீமைக் கருவேலமரம்

                                       

இந்தியாவிற்கு ஆங்கிலேயர்கள் விடுதலைக் கொடுத்து செல்லும்போது, நம்முடைய இயற்கை வளத்தை அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், நாடுமுழுவதும் சீமைக் கருவேல மரத்தின் விதைகளை தூவிவிட்டு சென்றுவிட்டனர்.

எந்த வறட்சியையும் தாங்கும் தன்மையையும் கொண்ட இந்த தாவரம், காடு, கண்மாய், குப்பைமேடு, சாலையோரம் என தமிழகம் முழுக்கப் பரவிவிட்டது. ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாலேயே இது சீமை கருவேலமாயிற்று.
வேலியே பயிரை மேய்ந்தது :

சீமைக் கருவேலம் என்றும் வேலிக்காத்தான் என்றும் பரவலாக அறியப்படும் இது, வேளாண் நிலங்களையும் பிற வாழ்வாதாரங்களையும் சேதப்படுத்தக்கூடிய ஒரு கொடிய தாவரம்.

இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது. இந்த முள் மரம் அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத்தாவரமாக அறிவிக்கப்பட்டு வேளாண் கண்காட்சியில் மட்டும் வைக்கப்பட்டு வருகிறது.

பாதிப்புகள் :

கருவேல மரங்களின் இலை, காய், விதை போன்றவை எந்த உயிரினத்திற்கும் பயன்படாதவை. இம்மரத்தின் நிழலில் கட்டிவைக்கப்படும் கால்நடைகள் மலடாக மாறும் என்பது சமீபத்தில் கண்டறியப்பட்டு உள்ளது.

இவற்றின் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் இவை முளைத்துள்ள பகுதியில் வேறு செடிகள் வளரமுடியாது. இவற்றின் விஷத்தன்மை அறிந்தே இதன் மீது எந்த பறவையும் கூடு கட்டுவது இல்லை.


விசேஷ குணங்கள் :

1. தண்ணீரைத் தேடி எவ்வளவு ஆழம் வேண்டுமானாலும் பயணிக்கவல்லவை.

2. இவை பகலில் குறைவான ஆக்ஸிஜனையும் இரவில் அதிகமான கார்பன்டை ஆக்ஸைடையும் வெளிவிடுபவை. அதனால் வளிக்காற்றிலுள்ள ஆக்ஸிஜன் அளவிற்கு ஆபத்து உள்ளது.

3. இவற்றை அகற்றிய 4 வருடங்களிலிருந்து 10 வருடங்களுக்கு பிறகுதான் அந்த மண் பழைய நிலையை அடைகின்றது. இந்த மரங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர் இல்லாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.

4. விறகுக்காக பயன்படுத்தப்படும் இதன் புகை புற்று நோயை உண்டாக்கும். இதன் புகை 14 சிகரெட் புகைப்பதற்கும் சமம் என்று எச்சரிக்கை தகவலும் வந்துள்ளது.

எப்படி அழிப்பது :

இயந்திரங்களைக் கொண்டு இம்மரங்களை வேரோடு பிடுங்கி அழிக்கலாம். ஆசிட் அல்லது வேறு வகையான முயற்சிகள் மண்வளத்தை கெடுக்கும். பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் இடத்தில், நல்ல மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலமாக மீண்டும் சீமை கருவேல மரங்கள் முளைத்து விடாமல் அழிக்கப்படுகிறது.

நீதிமன்ற ஆணை :

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்றவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு 2 மாதத்தில் சிறப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


முத்துக்கள் விளைந்த பூமியில்
மனம் விட்டு சிரித்து கொண்டிருந்த விவசாயிகளின் 
மனதில் முள்ளாய் நீ விளைந்து
சொல்லில்லா துன்பத்திற்கு ஆளாக்கி விட்டாய்...!
கல்நெஞ்சாய் நீ இந்த பூமியில் இருந்தாலும்
எம் வைரநெஞ்சம் கொண்ட மக்கள் உன்னை
வேரோடு அகற்றி களர் நிலத்தையும் பொன் விளையும் 
பூமியாக மாற்றும் என் சமுதாயம்......!
வறண்டு கிடக்கும் கண்மாயிலும் கண்ணாடி போல்
நீருக்கும் கெண்டையும், கெளுத்தியும்
துள்ளி விளையாடும்.....!
பெருவிருட்சமாக நீ இருந்தாலும் நீயொரு
பெருவிஷமென அறிந்துக் கொண்டது என்
அறிவுள்ள தமிழ்கூட்டம் எனவே உன்னை
அழிக்கும், புதைக்கும், விவசாயம் செழிக்கும்......!


No comments:

Post a Comment