வியாழன், 6 ஏப்ரல், 2017

சொல்லின் வலிமை...


                 
     நாம் பேசக்கூடிய சொல் பிறரை மகிழ்விக்கவில்லை என்றாலும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு சொல் வெல்லும்,  ஒரு சொல் கொல்லும்.

  வள்ளுவர் கூறுகிறார்,

                 தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு.

    தீயினாற் ஏற்பட்ட காயம்கூட ஆறிவிடும், ஆனால் நரம்பில்லா நாவில் இருந்து வந்த தீச்சொல் மனதை காயப்படுத்தி நீங்காத வடுவாய் மாறிவிடும்.

சேகுவாரா,கியூபாவின் விடுதலைக்காக போராடியவர். அவர் ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாடும் போது பேசியதாவது, ”ஒரு சொல் ஒரு விளைவை ஏற்படுத்தவில்லை என்றால் அதை பேசக்கூடாது” என்கிறார். அதாவது நாம் பேசும் வார்த்தை ஒரு கலவரத்தை தடுக்கும் வலிமை கொண்டதாக இருக்க வேண்டும் அல்லது ஒரு புரட்சியை உண்டாக்குவதாக இருக்க வேண்டும். மேற்கூறிய இரண்டில் ஒன்றை செய்யாவிட்டாலும் அச்சொல்லை பேசக்கூடாது என்கிறார் சேகுவாரா. சொல்லின் வலிமையை உணர்ந்து பேச வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக