வியாழன், 6 ஏப்ரல், 2017

சாதனைப் பெண்கள்..





சுனிதா வில்லியம்ஸ்..

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்காவில் உள்ள `நாசா' விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணிபுரிந்து வரும் இவர், சமீபத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தார். அங்கு பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சுனிதா, 188 நாட்கள் தங்கியிருந்து புதிய உலக சாதனை படைத்தார். விண்வெளியில் மராத்தான் ஓட்டம், விண்வெளியில் அதிக முறை நடந்த வீராங்கனை என்று வேறு பல சாதனைகளையும் அங்கு நிகழ்த்தினார்.

சுருதி வதேரா

இங்கிலாந்தின் புதிய பிரதமரான கார்டன் பிரவுனின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு இந்தியாவை சேர்ந்த சுருதி வதேராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார அறிஞரான இவர், சர்வதேச மேம்பாட்டுத் துறையில்,நாடாளுமன்ற துணை அரசு செயலர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. இது துணை அமைச்சர் பதவிக்கு சமமானதாகும். நெல்சன் மண்டேலா, கார்டன் பிரவுன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்த அனைவருக்கும் கல்வித் திட்டத்தை உருவாக்கியவர் சுருதி வதேரா என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் கிரிக்கெட் தரவரிசையில் சிறந்த வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி

முதல்முறையாக மகளிருக்கான கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. அறிமுகம் செய்துள்ளது. இதில் பந்து வீச்சாளர் பட்டியலில் இந்தியக் கேப்டன் ஜுலான் கோஸ்வாமி முதலிடத்தைப் பெற்றுள்ளார். 2007-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்-வீராங்கனைக்கான விருதுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கியது. ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சிறந்த வீரருக்கான விருதையும், இந்திய வீராங்கனை கோஸ்வாமி சிறந்த வீராங்கனைக்கான விருதையும் பெற்றனர்.

சானியாவின் சாதனை

சானியா மிர்சா இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை. இப்பொழுது ஹைதராபாத்தில் வசிக்கிறார். டென்னிஸ் தர வரிசையில் இடம் பிடித்த இந்தியப் பெண்களில் மிக உயர்ந்த தரவரிசையை அடைந்தவர் சானியா மிர்சா. இந்திய அரசாங்கம் அவருக்குப் பத்மசிறீ விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.
இன்றைய இளம் பெண்களுக்கு முன்மாதிரி பெண் எனலாம்.

1 கருத்து:

  1. பல பெண்கள் இதேபோல் சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் ... இன்னும் நிறைய சாதனை பெண்கள் காலத்தால் உருவாக்கப்படுவார்கள்.
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு