Skip to main content

தேடல்...

                   
 
            
22 ஆம் நாற்றாண்டு, சென்னை மாநகரம். கோகுல், 28 வயதுடைய ஆராய்ச்சியாளர். அவன் தாவரவியல் துறையில் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளான். ”சிறு வயதில் இவ்வளவு திறமையா?” என்று பலரும் பாராட்டி உள்ளனர். கோகுலுக்கு, கடவுள் பக்தி உணவில் உப்பு சேர்த்துக் கொள்ளும் அளவு இருந்தது.  

  ஒரு காலைப் பொழுது, தன் ஆராய்ச்சி பற்றி சிந்தித்தவாரே சாலையில் நடந்து கொண்டிருந்தான். அப்போது சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் கோகுலை நோக்கி நடந்து வந்தார். அவர் கோகுலை நோக்கி மெல்ல அருகில் வந்து, ”கோகுல்தானே உன் பெயர்” என்று கூறி புன்னகைத்தார். ”என் பெயர் கோகுல்தான், நீங்கள் யார்?” என்று கோகுல் பெரியவரை நோக்கி வினவினான்.

அதற்கு அந்த பெரியவர் அளித்த பதில் கோகுலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், பின்பு சிரிப்பை வரவழைத்தது. அவர் அளித்த பதில் “நான் தான் உங்களை படைத்த கடவுள்” என்றார். கோகுல் அவ்வார்த்தைகளை நம்பவில்லை. உன் பெயரை சரியாக கூறுகிறேன், என்னை நம்ப மாட்டாயா?, என்றார் கடவுள். என் பெயர் நாளிதழ்களில் வெளிவந்திருக்கிறது, அதைவைத்து கூட என் பெயரை கூறலாம். 

உங்களுக்கு கொளுத்துகிற வெயில் காரணமாக தலை சூடாகி எதோ உளறுகிறீர்கள், வாங்க உங்களுக்கு ஜூஸ் வாங்கி தருகிறேன் என்றான்.
                   உடனே கடவுள் அவன் வாழ்க்கையில் நடந்த பிறர் அறியாத சில நிகழ்வுகளைக் கூறினார். ஆராய்ச்சியாளர் அல்லவா சான்று கூறியவுடன் எதோ அறைகுறையாக நம்பினான். சரி எதற்கு இங்கு வந்தீர்கள் என்று கேட்டான். ”நான் படைத்த உலகம் எப்படி இருக்கிறது?” என்று பார்த்துவிட்டு செல்ல வந்தேன்.

 வழியில் ஒவ்வொரு காட்சிகளை பார்த்தவாரே இருவரும் நடந்து வந்தனர். வயது முதிர்ந்த ஒருவர் உணவுக்காக கையேந்தி நிற்கிறார். ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. கடவுள் ஏதோ முணுமுணுக்கிறார். அடுத்த நிமிடம் கையில் உணவு பொட்டலம். அதைக் கொண்டு போய் அவ்வயது முதிர்ந்தவரிடம் கொடுக்கிறார் கடவுள். கடவுளை மட்டுமல்ல அவர் கொடுத்த உணவையும் வித்தியாசமாக பார்த்தார் வயது முதிர்ந்தவர். கடவுள் அதை பற்றி பெரிதாக நினைக்கவில்லை. நான் படைத்த மனிதர்களா நீங்கள் மனதில் ஈரம் இல்லை என்று அழுத்துக் கொண்டார்.

                   ஒவ்வொரு காட்சியாக இருவரும் கண்டு வந்தனர். மதிய வேளை நெருங்கியது. இறைவன் என்றாலும் இரைப்பை என்று ஒன்று உள்ளதல்லவா, அவர் கோகுலிடம் தனக்கு உணவு வாங்கித் தருமாறு கேட்டார். அவனும் அருகில் இருந்த கடைக்குச் சென்று உணவு வாங்கித் தந்தான். கடவுள் அதை வாங்க மறுத்துவிட்டார். அவர் கோகுலிடம், “நான் உன்னை உணவு வாங்கி வா” என்று கூறினேன். நீ எதோ விஷத்தை கொண்டு வந்து கொடுக்கிறாய் என்றார்.

                    அவன் உடனே இதுதான் நாங்கள் சாப்பிடும் உணவு என்றான். இதன் பெயர் பீட்ஸா, இது பெயர் பர்க்கர் என்று பதிலளித்தான். கடவுள், எனக்கு உண்ண சாப்பாடு வாங்கி வா என்றார். ”சாப்பாடா?”, அது இங்கு கிடைப்பது அரிது என்றான். நெடுநேரம் அழைந்து திரிந்து உணவை கொண்டு வந்து கடவுளிடம் கொடுத்தான்.

   அப்போதும் கடவுள் அதை வாங்க மறுத்தார். “ஏன் இப்படி என்னை சோதிக்கீறீர்கள்?” என்று அழுத்துக் கொண்டான் கோகுல். நான் உன்னை உணவு கொண்டு வர சொன்னேன், மீண்டும் விஷத்தை நீட்டுகிறாய். நீ கொண்டு வந்த உணவில், பூச்சிகளை கொல்ல மருந்துகள் தெளிக்கப்பட்டது போல் தெரியவில்லை மனிதனையும் சேர்த்துக் கொல்ல தெளிக்கப்பட்டது போல் தெரிகிறது என்றார் கடவுள். அக்காலத்தில் ”இயற்கை விவசாயம்” இருந்தது. “உணவே மருந்து” என்று இருந்தனர். ஆனால் இப்போது விஷத்தை அல்லவா உண்ணுகிறீர்கள் என்றார்.

           கடவுளே, நீங்கள் கூறுவது அந்த காலம். இது 22 ஆம் நூற்றாண்டு என்றான். உடனே கடவுள், நீ நிறைய ஆராய்ச்சிகளை செய்கிறாய். அழியும் தருவாயில் இருக்கும் இவ்விவசாயத்தை தலைதூக்கி நிறுத்தும் வகையில் உன் ஆராய்ச்சி அமைய வேண்டும் என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு மேலோகம் சென்றார், ”நம் ஐயன் எப்போது தன் திருவிளையாடலை முடித்துவிட்டு வருவார் என்று காத்திருந்த பார்வதியைக் காண.” அப்போது தான் கடவுளுக்கு புரிந்தது “ஏன் அந்த வயது முதிர்ந்தவர் தன்னை ஏற இறங்க பார்த்தார் என்று.”


  கோகுலின் ஆராய்ச்சி விவசாயத்தை நோக்கிய தேடலாக அமைகிறது.

Comments

Popular posts from this blog

சிக்கனமும் சேமிப்பும்

சிறு துளி பெறுவெள்ளம் போல       சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்!
சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும்!       ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை!
ஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை!       உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை
தாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால்       சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்
நீ வாழ்க்கை என்னும் படியை
வெற்றியுடன் தாண்ட முடியும்!
சேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ

அறுவகைப் பெயர்கள்

                            அறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை                             பொருட்பெயர்                             இடப்பெயர்                             காலப்பெயர்                             சினைப்பெயர்                             குணப்பெயர்                             தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும். 

எடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.

எடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.


எடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.எடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்