செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

பொறுமை


           


நான் படித்ததில் என் மனம் கவர்ந்த ஒரு குட்டி கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அந்த கதை;
      அது ஒரு இனிய காலைப்பொழுது. மனைவி தன் கணவருக்கும் மகனுக்கும் உணவு பரிமாறுகிறார். மகன் வேலைக்குச் செல்ல தாமதமாகிவிட்டதால் வேகமாக உணவு எடுத்துக் கொண்டு இருக்கிறார். அப்பொழுது வெளியில் ஒரு சிட்டுக் குருவி இறை தேடிக் கொண்டு இருக்கிறது. அப்பா அந்தக் குருவியை சுட்டிக் காட்டி ’இதன் பெயர் என்ன என்று?’ கேட்கிறார். அதற்கு மகன் சிட்டுக் குருவி’ என்று பதில் அளிக்கிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு தந்தை மீண்டும் மகனிடம் அந்தப் பறவையை சுட்டிக் காட்டி ‘இதற்கு பெயர் என்னவென்று?’ கேட்கிறார். சற்று பொறுமையை இழந்த மகன் ‘சிட்டுக் குருவி’ என்று கோபமாக கூறினார். மீண்டும் தந்தை அவ்வாறு கேட்க கோபமடைந்த மகன் ‘அம்மா! அப்பாவுக்கு வேலையே இல்லையா? கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்கிறார்.’ அம்மா நீங்களாவது அப்பாவிற்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு வேலைக்குச் சென்றான்.
          அவன் சென்ற பின்பு கணவன் தன் மனைவியிடம் கூறினார் ‘இது போலத் தான் அவன் சிறு வயதில் கேட்டபொழுது நான் பொறுமையை இழக்காமல் பதிலளித்தேன்.’ ஆனால் இந்த காலத்து இளைஞர்களிடம் பொறுமை என்பதே இல்லை என்று கூறினார்.
            இந்தக் கதை என் மனம் கவரக் காரணம் இதில் சொல்லப்பட்ட கருத்தே. எனவே பொறுமையுடன் செயல் பட்டால் எதையும் வெல்ல முடியும்.
















4 கருத்துகள்:

  1. உண்மைடா இன்றைய அவசர வாழ்க்கையில் அனைவருமே பொறுமையில்லாமல் அவசரமாக சென்று கொண்டிருக்கிறோம்.நல்ல பகிர்வு சுஹாசினி.

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு கதையைப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள் சுகாசினி

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு கதை. வாழ்க்கைக்கு முக்கியம் பொறுமை. பொறுமையோடு செயல்படுவோம்..

    பதிலளிநீக்கு
  4. காணொளியாக பார்த்திருக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு