Featured post

Corruption

Corruption in fund; Corruption in food; Corruption in education; Corruption in entertainment; At last corruption in man's life.....

Friday, 20 January 2017

எடிசன் குறிப்பு

                           
 Image result for எடிசன்
     ஒரு நாள் பள்ளியிலிருந்து  வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே  கொடுக்க வேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான். அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தம் ஆக தன் மகன் கேட்கும்படி இப்படி படித்தாள்.
     “உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது” என்று பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகி விட்டார்.
     எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார். இப்படி இருக்கையில் ஒரு நாள் தனது வீட்டின் பழைய சமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பு  ஒரு முறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சை ஆக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்.
அதில் இப்படி எழுதியிருந்தது
     ”மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்ப வேண்டாம்.” என்று இதைப்படித்த எடிசன் கதறி அழுதார்” பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.
      மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன்  தனது “தாயாலேயே” மாபெரும் கண்டுபிடிப்பாளனான். என்று தன் பிள்ளைகள்  மீதான “உயர்வான எண்ணங்கள்”. அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும் குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்.

                                                      


Tuesday, 17 January 2017

பாரதம் யார் பிடியில். .??
நேற்றைய பாரதம்
ஆங்கிலேயர் பிடியில். ..!!

இன்றைய  பாரதம்
அரசியலின் பிடியில். ..!!

நாளைய பாரதம்
யார் பிடியில். ..???

இனியொரு விதி செய்வோம். ..!!!Sunday, 15 January 2017

இலித்தியம்


                                   இலித்தியம் 
                          Image result for லித்தியம்
இலித்தியம் (Lithium, Li) என்பது வெள்ளி போலும் தோற்றம் உள்ள மென்மையான ஒரு மாழை (உலோகம்). இது தனிம அட்டவணையில் 3ஆவதாக உள்ள ஒரு தனிமம். இதன் அணுவெண் 3.
இதன் அணுக்கருவில்மூன்று நேர்மின்னிகளும் நான்கு நொதுமிகளும் உள்ளன. இது மிகவும் மென்மையாக உள்ளதால், ஒரு கத்தியால் எளிதாக வெட்டலாம். மாழைகள் (உலோகங்கள்) யாவற்றிலும் மிகக்குறைவான எடை கொண்ட மாழை இலித்தியம் ஆகும். இலித்தியத்தின் அடர்த்தியும், நீரில் பாதியளவு தான். இலித்தியம்மின்கலங்களிலே பெருமளவு பயன்படுகின்றது.
இலித்தியத்தின் அணு எண் 3 ஆகையால் இதன் அணுக்கருவிலே மூன்று நேர்மின்னிகள் (proton, புரோட்டான்) உள்ளன; மூன்று எதிர்மின்னிகள் (electron, இலத்திரன்) அணுச் சுழல் பாதைகளில் உலா வருகின்றன. இந்த மூன்று எதிர்மின்னிகளில், இரண்டு எதிர்மின்னிகள் உட்சுற்றுப்பாதையில் அதற்கான நிறைவுற்ற நிலையில் உள்ளன. ஆனால், ஓர் எதிர்மின்னி மட்டும் தனியாய் அடுத்த சுழல் பாதையில் இருப்பதால், இவ்வெதிர்மின்னியை வேதியியல் வினைகளில் எளிதில் இழக்கின்றது. இதனால், எளிதாக நீரோடு இயைவதால் (வேதியியல் வினையால் சேர்வதால்), இலித்தியம் தனியாய் எளிதில் கிடைப்பதில்லை. தூய இலித்தியம், காற்றிலும் நீரிலும் எளிதில் தீப்பற்றும் ஒரு தனிமம். இதன் தன்வெப்பக் கொள்ளளவு எல்லாத் திண்ம நிலைப் பொருள்களிலும் மிகப்பெரியது. இதன் பெறுமானம் 3582 J Kg-1 K-1ஆகும். அதாவது ஒரு கிலோகிராம் எடையுள்ள இலித்தியத்தின் வெப்பநிலையை ஒரு கெல்வினால் உயர்த்த வேண்டுமெனில், 3582 யூல் (Joule) ஆற்றல் தரவேண்டும்.
இலித்தியம் புவியில் கிடைக்கும் தனிமங்களில் 33 ஆவது மலிவான பொருள்.[1]. இது உலகில் பரவலாகக் கிடைக்கின்றது. புவியின் புற ஓட்டில் மில்லியனில் 20 முதல் 70 பங்குகள் (ppm) [2] என்ற அளவில் உள்ளது.
வேதியல் இயல்புகள்
இலித்தியம் நீருடன் இலகுவில் தாக்கம் புரிந்து இலிதியம் ஐதரொக்சைட்டையும் ஐதரசன் வாயுவையும் உருவாக்கும். எனினும் இதன் தாக்கம் ஏனைய கார உலோகங்களின் அளவுக்கு வீரியமானதல்ல. இலிதியத்தை வளியில் திறந்து வைத்தால் கறுப்பு நிறப் படை உலோகத்துக்கு மேல் உருவாகும். இதுஇலிதியம் ஐதரொக்சைட்(LiOH + LiOH.H2O), இலிதியம் நைட்ரைட் (Li3N), இலிதியம் கார்பனேட்(Li2CO3) (இலிதியம் ஐதரொக்சைட்டும் காபனீரொக்சைட்டும் தாக்கமுறுவதால் தோன்றுவது.) ஆகிய சேர்மங்களின் கலவையாகும்.
இலித்தியத்தை நெருப்புச் சுவாலை மேல் பிடிக்கும் போது இலிதியத்தின் சேர்மங்கள் சிவப்பு நிறச் சுவாலையைக் கொடுக்கும்; பின்னர் இலிதியம் வெண்ணிறச் சுவாலையைக் கொடுக்கும்.
சாதாரண சூழ்நிலையில் நைதரசனுடன் தாக்கமடையும் ஒரே உலோகம் இலிதியம் ஆகும். இலிதியமும்மக்னீசியம் உலோகமும் மூலைவிட்டத் தொடர்பு கொண்டவையாகும். நைட்ரைட் உருவாக்கல், எரியும் போது ஒக்சைட்டுடன் (Li2O) பரஒக்சைட்டையும்(Li2O2) தோற்றுவித்தல், இவ்வுலோகங்களின் நைட்ரைட்டுகளும் கார்பனேற்றுகளும் வெப்பப்பிரிகை அடைதல் ஆகிய இயல்புகளில் மக்னீசியம் மற்றும் இலிதியம் ஒத்த இயல்பைக் காட்டுகின்றன. எனவே இவை மூலைவிட்டத் தொடர்பைக் கொண்டுள்ளன.
உயர் வெப்பநிலையில் ஐதரசனுடன் தாக்கமடைந்து இலிதியம் ஹைட்ரைட்ஐ (LiH) உருவாக்கும்.

பயன்கள்

கண்ணாடி மற்றும் செராமிக்

இலித்தியம், ஹைட்ரஜனுடன் கூடி,உடனடியாக இணைந்து இலித்தியம் ஹைட்ரைட் உண்டாகின்றது. இதை நீரிலிடும் போது அவை பிரிகின்றன.ஒரு கிலோ இலித்தியம் ஹைட்ரைட் 2800 லிட்டர் ஹைட்ரஜன் வளி மண்டல அழுத்தத்தில் அறை வெப்ப நிலையில் தருகிறது. ஹைட்ரஜன் அவசரத் தேவைக்கு உகந்த மூலமாக இதைக் கொள்கின்றனர். இலித்தியம் சேர்ந்த கண்ணாடி வெப்பத்தைக் கூடுதலாகத் தாக்குப் பிடிக்கின்றது. வெப்ப மண்டலங்களில் கட்டடங்களின் கட்டுமானப் பொருளாகவும் , வெப்பமானிகள் தொலைக்காட்சி பெட்டியின் சின்னத் திரை மற்றும் சூரிய ஒளி எதிரொளிப்பான் போன்றவற்றில் பயன்பாட்டுப் பொருளாகவும் இலித்தியம் கண்ணாடி பயன்தருகிறது.

மின்கருவிகள்

இலித்தியம் புளுரைடு படிகம் புறஊதாக் கதிர் உடுருவும் திறனை மிகைப் படுத்துகின்றது. புறஊதாக் கதிர் தொடர்பான ஆய்வுகளில் இது பயன்தருகிறது. இதயத் துடிப்புச் சீராக்கி (Pace Maker) போன்ற பல சாதனங்களுக்கு இலித்தியம் மின்கலம் (lithium cell) உதவுகிறது. இதில் நேர்மின் வாயாக இலித்தியமும் மின்னாற் பகுபொருளாக இலித்தியக் கூட்டுப் பொருளான இலித்தியம் புளூரைடு அல்லது அயோடைடு பயன்படுகின்றது. இதன் எதிர் மின்வாயாக கார்பன் மோனோ புளூரைடு .
அல்லது அயோடைடு செயல்படுகின்றது. இது 1.5-3.0 வோல்ட் மின்னழுத்தம் தரக்கூடியது. எனினும் இத்தகைய மின்கலத்தைப் புதிப்பித்துக் கொள்ள முடிவதில்லை. 40 பாகை செல்சியசுக்கு மேலும் - 20 பாகை செல்சியசுக்கு கீழும் இம் மின்கலத்தைப் பயன்படுத்த முடிவதில்லை.

உயவுப் பொருட்கள்

இலித்தியம் ஐதராக்சைடை ஒரு கொழுப்புப் பொருளுடன் சேர்த்து சூடு படுத்த இலித்தியம் சோப்பு கிடைக்கின்றது. இது எண்ணெயின் பாகுத் தன்மையை அதிகரிக்கின்றது. இதனால் கொழுப்புப் பசை (Grease) தயாரித்து உயவுப் பொருளாகப் பயன்படுத்த முடிகின்றது. இசுட்டியரேட்டு (stearate), பால்மிட்டேட்டு (Palmitate) போன்ற சில கரிம இலித்திய கூட்டுப் பொருட்கள் முதல் தரமான மசகுப் பொருட்களாக விளங்குகின்றன.

இலித்தியத்தின் மருத்துவப் பயன்கள்

இரத்தத்தில் யூரிக் அமில அதிகரிப்பு உடல் நலக் குறைவை ஏற்படுத்தும். இது முடக்கு வாதம் சிறுநீர்ப்பைக்கல், மன நோய், மன அழுத்தம் போன்ற குறைபாடுகளை ஏற்படுத்தும்.இதற்கு தூய இலித்தியம் கார்போனேட் டு மருந்தாக அளிக்கப் படுகின்றது.மனநலம் பாதிக்கப்பட்டு சித்தபிரமை பிடித்த நோயாளிகளுக்கான சிகிச்சை முறையில் இலித்தியம் கார்போனேட்டு பயன்படுகின்றது.

Tuesday, 10 January 2017

யார் இந்த விவசாயி..???
1031 - சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.
1032 - உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து.
பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.
1033 - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.
1034 - பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.
1035 - இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.
1036 - உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை.
எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.
1037 - தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.
1038 - ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.
1039 - செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும்.
உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.
1040 - இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.

இத்தகைய உழவனையும் உழவுத் தொழிலையையும் எண்ண மறக்கலாமா..??