திங்கள், 26 செப்டம்பர், 2016

ருக்மணி தேவி அருண்டேல்..!!!



Image result for ருக்மணி தேவி அருண்டேல்

பாரதத்தின் பழமையான பரதக் கலைக்கு புத்துயிர் ஊட்டியவர் ருக்மணி தேவி அருண்டேல். நம் நாட்டுக் கலைகளையும் – சிறப்பாக நாட்டியக் கலையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ‘கலா சேத்ரா’ என்ற கலைக்கூடத்தை நிறுவியவர் ருக்மணி தேவி அருண்டேல்.

     மதுரையில் சமஸ்கிருதப் பண்டிதராகவும், பொறியியல் வல்லுதராகவும் இருந்த ஏ.நீலகண்ட சாஸ்திரி – சேஷம்மாள் தம்பதியருக்கு மகளாக 1904 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்29 ஆம் நாள் ருக்மணி பிறந்தார்.

     பள்ளியில் படிக்கும்போதிருந்தே இசைக்கலையை கற்று வந்தார். நடனம் ஆடுவதிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். சமூகப் பணி புரிந்து வந்த ‘டாக்டர் ஜி.எஸ்.என்பவர் கலை உணர்வு மிக்க ருக்மணியை மணந்து கொண்டார். ருக்மணி, புகழ்பெற்ற நடன ஆசிரியர் பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் நடனம் கற்றுக்கொண்டார்.மிகுந்த  ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் நடனக் கலையைக் கற்று வந்தார். அக்காலக்கட்டத்தில் நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்கள் நடனம் ஆடுவதை யாரும் விரும்புவதில்லை. ருக்மணி தேவியின் நடன அரங்கேற்றம் 1935 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. நடனத்தைப் பார்த்தவர்கள் பாராட்டினார்கள்.

     ருக்மணி தேவி ஆரம்பித்து வைத்த நடனக்கலையை பல பெண்கள் ஆர்வத்துடன் கற்று வந்தார்கள். நாட்டியக் கலையை ருக்மணி தேவி மிகுந்த மதிப்போடு பரத நாட்டியம் என்று அழைத்தார். ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது தங்கள் நாட்டு நடனக் கலையை மிகுந்த மதிப்போடும் உயர்வாகவும் கருதுவதைக் கண்டு புனிதமான நடன கலையை நமது நாட்டில் இழிவாக நினைக்கும் எண்ணத்தை மாற்ற வேண்டும் என உறுதி கொண்டார். 1936 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் நாள் ’கலாசேத்ரா’ ஆரம்பிக்கப்பட்டது.

     ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனைப் போல ருக்மணி தேவியின் கலாசேத்ரா கலைக்கூடமாக  சிறந்து விளங்கியது. காளிதாசர் இயற்றிய ‘குமார சம்பவம்’ என்னும் காவியத்தை நாட்டிய நாடகமாக அமைத்திருந்தார். ’குற்றாலக்குறவஞ்சி’ என்னும் காப்பியத்தை நாட்டிய நாடகமாக்கி குற்றாலத்திலேயே அரங்கேற்றினார் ருக்மணி தேவி. ’சகுந்தலை’ நாட்டிய நாடகத்தையும் இயக்கி அரங்கேற்றம் செய்தார். கலாசேத்ராவில் ஓவியப்பள்ளி ஒன்றினையும் தொடங்கினார். பிராணிகளை வதைப்பதற்கு எதிராக ராஜ்ய சபையில் ருக்மணி தேவியின் நடவடிக்கையால் பிராணிகள் வதையை எதிர்க்கும் வகையில் சட்டம் உருவானது. பிராணிகள் நலக்குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

     ருக்மணி தேவியின் பிராணி நலத் தொண்டினைப் பாராட்டி லண்டனில் உள்ள பிராணி வதை தடுப்புக் கழகமான ராயல் சொசைட்டி விக்டோரியா அரசி வெள்ளிப் பதக்கத்தை வழங்கியது. 1956 ஆம் ஆண்டு ‘பத்மபூஷன் பட்டமும் 1957 ஆம் ஆண்டு ‘சங்கீத நாடக அகாதமி விருதும் வழங்கி கௌரவப்படுத்தியது.

     பிராணிகள் நலக்குழு ருக்மணி தேவியை பாராட்டி பிராணிமித்ரா என்ற பட்டத்தை வழங்கியது. கல்கத்தாவிலுள்ள ரவீந்திரபாரதி பல்கலைக்கழகம் 1969 ஆம் ஆண்டு ‘டாக்டர்’ பட்டம் வழங்கி கௌரவித்தது. காசி பல்கலைக்கழகமும் ருக்மணி தேவிக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கியது.

     ’தனிப்பெரும் கலைஞர்’ என்ற விருதை 1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்றம் வழங்கியது. மத்திய பிரதேச மாநிலம் ‘காளிதாசர் விருது’ வழங்கி கௌரவித்தது. பாரதியாரின் பாஞ்சாலி சபதம், ராமாயணம், ஜடாயு, பீஷ்மன், சீதா சுயம்வரம் போன்ற 26 நாட்டிய நாடகங்களைத் தயாரித்து அரங்கேற்றம் செய்துள்ளார் ருக்மணி தேவி.

     கலாசேத்ராவில் ‘உ.வே. சாமிநாதய்யர் நூலகம்’ என்ற பெயரில் நூலகம் ஒன்றினையும் தொடங்கினார். பரதக் கலையை உலகமெங்கும் அறிய காரணமாக இருந்த ருக்மணி தேவி அருண்டேல் 1986 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். ‘கலாசேத்ரா’ காலமெல்லாம் ருக்மணி தேவியின் புகழை உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும்.  

7 கருத்துகள்:

  1. வருக சகோதரியே.தங்களின் தமிழ் எழுத்துகளை அன்போடு வரவேற்கிறேன்,தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துகள் டா.

    பதிலளிநீக்கு
  2. வருக சகோதரியே.தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துகள் .

    பதிலளிநீக்கு
  3. தங்களது வாழ்த்துக்கு நன்றி சகோதரியே

    பதிலளிநீக்கு