த்ரான்ஸ் அன்ட் பெடல்ஸ்

      த்ரான்ஸ் அன்ட் பெடல்ஸ்

சிறுவன் ஒருவன் தனது வீட்டிற்க்கு அருகே உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்பொழுது பெரி பழங்கள் நிறைந்த தோட்டத்தைப்பார்த்து ஈர்க்கப்பட்டான்.பின்பு அந்த பழங்களை பரிக்கச் சென்றான்.அந்த பெரி செடிக்கு முன் முட்கள் நிறைந்த செடிகளும் படர்ந்திருந்தது.தன் இரு கரங்களையும் நீட்டி முட்களையும் பொருட்படுத்தாமல் பழங்களை பரித்தான்.
பின்பு ஒரு முள் அவனை கடுமையாக தாக்கியது.அழுது கொண்டே தன் அம்மாவிடம் ஓடி சென்று நடந்ததை கூறினான்.``தம்பி வாழ்க்கையில் பெறுவதற்க்காக நீ சிலவற்றை இழக்கத்தான் வேண்டும்.அந்த காயங்களுக்கு பின்னும் சுவையான இந்த பழங்கள் உனக்கு கிடைத்ததல்லவா?.பழங்களை பரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் முன்னே இருந்த முட்களை நீ கவனிக்கவில்லை’’ என்றார்.ஆகையால் ஒன்றை பெற வேண்டுமெனில் சில தடைகளை நாம் தாண்ட வேண்டும் என்பதனை அவன் இந்தன்மூலம் தன் தாயிடமிருந்து கற்றுக்கொண்டான்.

Comments

Post a Comment