Featured post

மகளிரின் மாண்பு

            பெண்ணின் பல வேடம்                             பெண்  கற்பனைகளின் கடல்,              கனவுகளின் அரசி,            கவிதைகளின் ...

Tuesday, 27 September 2016

படித்ததில் பிடித்தது

கூட்டாஞ்சோறு என்ற வலைப்பதிவில் எழுதிவரும் நண்பர் 

எஸ்.பி. செந்தில்குமார் அவர்களது பதிவில் என்ற பதிவு  இன்று நான் வாசித்த பதிவுகளில் குறிப்பிடத்தக்கது 

சாலைப்பாதுகாப்பு விதிகள் பயிலும் மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளது.


நன்றி நண்பர் சிபி.செந்தில்குமார்

Monday, 26 September 2016

மலர்களின் பெயர்கள்..!!!

       

Image result for flower images
                            
மலர்கள் என்றால் மயங்காத ஆட்கள் இவ்வுலகில் இல்லை. கூந்தலில் சூடி அழகு படுத்தி கொள்ளவும், இறைவனை அர்ச்சனை செய்யவும், மற்ற அலங்காரங்களிலும் மலர்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறாரகள். ஆனால் நமக்கு  தெரிந்த மலர்களின் பெயர்களை கேட்டால் இருபது மலர்களின் பெயர்களுக்கு மேல் தெரியாது. ஆனால் பல நூறு வகையான மலர்கள் உள்ளன. அவற்றில் குறிஞ்சிப்பாட்டு என்ற பழந்தமிழ் இலக்கியத்தில் 99 வகையான
மலர்களின் பெயர்கள் குறிப்ப்பிடப்பட்டுள்ளன. அவை

ருக்மணி தேவி அருண்டேல்..!!!Image result for ருக்மணி தேவி அருண்டேல்

பாரதத்தின் பழமையான பரதக் கலைக்கு புத்துயிர் ஊட்டியவர் ருக்மணி தேவி அருண்டேல். நம் நாட்டுக் கலைகளையும் – சிறப்பாக நாட்டியக் கலையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ‘கலா சேத்ரா’ என்ற கலைக்கூடத்தை நிறுவியவர் ருக்மணி தேவி அருண்டேல்.

படித்ததில் பிடித்தது

கூட்டாஞ்சோறு என்ற வலைப்பதிவில் எழுதிவரும் நண்பர்

எஸ்.பி. .செந்தில்குமார் அவா்கள் இன்று தம் பக்கத்தில்


 ஆண்களின் மோசமான குணம்..!

என்ற தலைப்பில் சாலைப்பாதுகாப்பு குறித்த நல்லதொரு பதிவை

எழுதியுள்ளார். அவருக்கு நம் பாராட்டுக்களையும்,

வாழ்த்துக்களையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.

Sunday, 25 September 2016

இலவச மின்நூல்கள்...!!

இன்று நான் பகிரவுள்ள இணைய தள முகவரியில் தாங்கள் இலவசமாக மின் நூல்களை படிக்கலாம்,பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் யாருக்கு வேண்டுமானாலும் இந்நூல்களை  இலவசமாக வழங்கலாம்.

குறிப்பாக தங்களின் நூல்களையும் அல்லது வேறு நூல்களையும் இந்த தளத்தில் வழங்கலாம்.

மேலும் தகவல் மற்றும் இணைய முகவரி; இலவச மின்நூல்கள்

வறுமை             
     

 கொடிது கொடிது வறுமை கொடிது என்பது போல் வறுமையிலும் ஏழ்மை கொடிது இந்த ஏழ்மையினால் வாடும் மக்கள் உணவு இல்லாமல் தவிர்ப்பது மிகவும் கொடிது .நமக்கு கிடைக்கும் உணவை நாம் குப்பை போல் கொட்டி வீணாக்கிறோம் .இந்த அன்னம் கூட இல்லாமல் தான் ஒரு நாளில் நிமிடத்திற்கு ஒரு முறை ஏதோ ஒரு இடத்தில் ஒரு மனிதன் இறந்துக்கொண்டே தான் இருக்கிறன் . இதை கவனிப்பதற்கு யாருக்குமே நேரம் இல்லை என்பது தான் மிகவும் கொடுமையானது. இந்த உலகம் எவ்வளவு மாறியினாலும் காலமும் நேரமும் ஓடிக்கொண்டே இருந்தாலும் “வறுமை” என்ற சொல் மாறாமல் இன்னும் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. பசியினால் ஏழை குழந்தை கதறி அழுவது இன்னும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது. இனியவது உணவை வீணாக்காமால் இருங்கள். இல்லை என்று வருபவருக்கு கொடுத்து உதவியினால் கூட அந்த ஒரு மனிதன் ஆவது இறக்காமல் இருப்பனோ என்று  தான். இந்த பசியின் முக்கிய காரணம் வறுமை தான் இந்த வறுமையே ஓழித்தால் மட்டுமே பசி என்ற கொடிய நோய் நீங்கும்.

அடுத்த நூற்றாண்டியில் ஆவது வேறுபாடு இல்லாத மக்களை கொண்டு ஒரே இனம் தமிழினம் எனப்போற்றி வறுமையில்லாத நாட்டை உருவாக்க வேண்டும்.       
       

கால வித்தியாசம்
கால வித்தியாசம்

நீதிகள்  விற்கப்படுகின்றன
விதிகளை  மீறப்படுகின்றன
அரசியியலில் செய்யும் ஊழலுக்கு
அரசு கைதாளம் போடுகிறது
மக்களுக்கு இலவசம் கொடுத்து கொடுத்து
அடிமைப்படுத்தி  வருகிறார்கள்

இக்காலம்

வானத்தில் பட்டம் விட்டது ஒரு காலம்
வானத்திற்கே சென்று ஆராய்ச்சி செய்வது இக்காலம்
பழைய மரபுகளோடு வாழ்ந்தது அக்காலம்
பழைய மரபுகள் இன்றி போனது இக்காலம்
காலங்கள் மாறியினாலும் இலக்கியங்கள் மாறாது
இக்காலத்தில் பணத்திற்குக் கொடுக்கும் மதிப்பு
மனிதனுக்கு  கிடைக்கவில்லை ……………………….
நம் தாய் மொழிக்கு கொடுக்க வேண்டிய மதிப்பை
பிறமொழிக்கு  கொடுக்கிறார் ……………………………
உலகில் எது மாறியினாலும் மாற்றம் ஒன்றே மாறாது .

.

ஆஸ்கார் சான்றிதழ் பெற்ற தமிழர்..!!


The 85th Academy Awards® will air live on Oscar® Sunday, February 24, 2013.


ஆஸ்கார் தமிழன் ஏ.ஆர்.ரஹ்மானிற்கு பிறகு, ஆறு வருடங்கள் கழித்து திரைத்துறை பிரிவில் உயரிய விருதான, ஆஸ்கார் விருதின் சான்றிதழை பெற்றுள்ள தமிழர் ஒருவர். கொட்டலங்கோ லியோன் என்ற வெளிநாட்டு வாழ் தமிழருக்குதான் கிடைத்திருக்கிறது ஆஸ்கார் சான்றிதழ்.


யார் இந்த கொட்டலங்கோ லியோன்:
திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட கோட்டாலங்கோ லியோனியின் தந்தைக்கு சங்கரன் கோவில் சொந்த ஊர். கோயம்புத்தூரில் வளர்ந்த லியோனி, தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார்.
அடிப்படையில் டெக்னிக்கல் இன்ஜினியரான லியோனி. சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் டெக்னிக்கல் டிசைன் பிரிவில் உள்ளார். அத்துறை சார்ந்த பிரிவிலேயே லியோனிவிற்கு ஆஸ்கார் விருது, கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது.

Sunday, 18 September 2016

நா.முத்துகுமார்-க்கு சமர்பணம்...!!!


எங்கள் கல்லூரியில் வாரந்தோறும் நடைபெறும் சிந்தனை மன்றத்தில் இந்த வாரம் கவிஞர் நா.முத்துகுமாரின் கவிதைகள் கலந்துரையாடல் என்ற தலைப்பில் நடைபெற்றது.இதில் பல மாணவிகள் அவரின் கவிதைகளை பாடியும்,கலந்துரையாடியும் அவரை நினைவு கூர்ந்தனர்.அதில் ஒரு சிலர் அவரை குறித்த  தனது சொந்த படைப்பில் கவிதை ஒன்றை எழுதி வாசித்தனர்.அதில் ஒன்றே இக்கவிதைத் தொகுப்பு.மூன்றாம் ஆண்டு கணிதத் துறையில் பயின்று வரும் வ.கீர்த்தனா அவர்களால் எழுதப்பட்டது.

தன்னம்பிக்கை 10
Image result for rama kaviyam
(தன்னம்பிக்கை தொடர்கிறது…)

உங்கள் உறவினர்களில் யாருடனாவது உங்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டிருக்குமெனில், சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். அதிகப்படியான பேச்சுதான் அதற்கு மூல காரணமாக இருந்திருக்கும்.

எவ்வளவு அதிகமாக வீண் வார்த்தைகளைப் பேசுகிறோமோ, அவ்வளவு அதிகமாகப் பாவம் செய்கிறோம் என்று பொருள். எவ்வளவு கண்ணியத்துடன் அமைதி காத்துக் கொள்கிறோமோ அவ்வளவு புண்ணியம் செய்கிறோம் என்று பொருள்.

நம்உடம்பிலுள்ள கெட்ட கொழுப்புகள் ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகளைவிட, ‘வாய்க்கொழுப்பு’ ஏற்படுத்துகின்ற பிரச்சனைகள் மிகக் கொடியவை. எனவே நாம் எதை அடக்குகிறோமோ இல்லையோ நாவை அடக்குவது அவசியம்.

‘அவரை மாதிரி ஒரு ஆளை நீங்க பார்க்கவே முடியாது. வம்புதும்பு கிடையாது. அளவோட அருமையா பேசுவாரு. ரொம்ப அமைதியான மனுஷன்’ என்று ஒருவரைப் பற்றிச் சொல்லக் கேட்கும்போது, அந்த மனிதர் மீது தானாக ஏற்பட்டுவிடுகிறது.

எந்தச் சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக இருந்து பாருங்கள். அநீதியாகப் பேசுகிறவர்களும் அக்கிரமக்காரர்களும் உங்களை விட்டு விலகி ஓடிவிடுவார்கள்.

எனவே அளவோடு பேசி, உங்கள் மதிப்பையும் மகிழ்ச்சியையும் காத்துக் கொள்ளுங்கள்.

அதுதான் வாழ்வெனச் சொல்லுகிறேன்.
நீங்கள் வாழ்வாங்கு வாழ்ந்திடச்  சொல்லுகிறேன்.
                     
                        நன்றி!!!தன்னம்பிக்கை 9

                 Image result for rama kaviyam

(தன்னம்பிக்கை தொடர்கின்றது..)

பரதா ! நம் தந்தை நான்கு பிள்ளைகளைப் பெற்றார். மூத்தவன் ‘எனக்கு நாடு வேண்டாம். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய காடுதான் வேண்டும்’ என்று சொல்லிச் சென்றுவிட்டான். அவனுக்கு உறுதுணையாக இருப்பதே பெருமை என்று இலக்குவன் அவனுடன் சென்று விட்டான். இப்படிச் சென்றவர்கள் இருவரும் உரிய காலம் கடந்தும்கூட இன்னும் வரவில்லை என்பதால் நீயோ  நெருப்பில் விழப்போவதாகக் கூறுகிறாய். அப்படியானால் ஆட்சியை ஏற்றுக்கொள்ள நான்தான் கிடைத்தேனா?’ என்று கேட்கிறான்.

ராம காவியத்தில் சத்ருக்கனன் பேசியது இவ்வளவுதானே. ஆனால் சரியான நேரத்தில் நறுக்கென்று பேசிகிறான் அவ்வளவுதான்!

ஆனால் இங்கே நிலைமை வேறு. நாம் பார்க்கும் இடங்களிலெல்லாம், பெரும்பாலான மனிதர்கள் நிறைய பேசிகிறார்கள்; பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

அவர்கள் பேச்சுகளில் பெரும்பகுதி வீண்கதைகள்; பொய்யான தகவல்கள்; அர்த்தமற்ற வாக்குகள்வாதங்கள்.

அடுத்தவரைக் கெடுத்துப் பேசுவதென்றால் விடியவிடிய ஒரு சொட்டுத் தண்ணீர்கூட குடிக்காமல் பேசுவார்கள். வீண்பழி சுமத்துவதென்றால் அது அவர்களுக்குத் தேன் குடிப்பதுபோல்.

‘புறம் பேசுதல் என்பது இறந்துபோன தன் சகோதரனின் இறைச்சியைப் புசிக்க விருப்பம் கொள்ளுதலுக்கு சமம்’ என்று திருக்குர் ஆன் கூறுகிறது. ஒருவரை ஒருவர் நிந்தனை செய்தால், வீண்பழி சுமத்தினால், அதனால் விளைகின்ற பாவம், யார் அந்தச் செயலை முதலாவது தொடங்கினாரோ அவரையே சாரும் என்றும் அது நம்மை எச்சரிக்கிறது.

தூங்கிற நேரம் தவிர மீதி நேரமெல்லாம் பேசிக் கொண்டே இருப்பவர்கள் பிரச்சினைக்குரியவர்கள். அநீதியான வார்த்தைகளும், பொய்யும் புரட்டும் அவர்களிடமிருந்து வெளிப்படும்.

                    
                                         (தொடரும்..)     

Saturday, 17 September 2016

மொபைல் வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு! ! ! !Photo

சில நாட்களுக்கு முன் பெண் ஒருவருக்கு நடந்த நிகழ்வு இது.அவர் வைத்திருக்கும் மொபைல்-க்கு  தேவை இல்லாத SMS மற்றும் தவறான கால்கள் வந்துள்ளது. இவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து வந்துள்ளது. வீட்டில் சொன்னால் நீ இனி மொபைல் பயன்படுத்தாதே என சொல்லி விடுவார்கள் என பயந்து இவர் வேறு எண் மாற்றி விட்டார் .

ஆனால் சில நாட்கள் கழித்து மீண்டும் அதே எண்ணில் இருந்து பிரச்சனை.நம்பர் மாற்றியும் எப்படி இதுபோல கால் ,SMS வருகிறது என குழம்பி போனார். தனது நண்பரிடம் என்ன செய்யலாம் என கேட்டார் . அவருக்காக அவருடைய நண்பர்கள் துணையுடன் விசாரித்ததில் சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.
இவர் வழக்கமாக ரீ- சார்ஜ் செய்யும் இடத்தில் இவர் நம்பரை கொடுத்துவிட்டு E.C பண்ண சொல்லிவிட்டு போய் விடுவார் . இந்த நம்பரை வைத்து அங்கு உள்ள சிலர் செய்த செயல்தான் இது.

இதுபோல ஆபத்தில் நீங்கள் மாட்டாமல் இருக்க சில வழிமுறைகள்*முடிந்த வரை ரீ-சார்ஜ் கார்ட் வாங்கி ரீ –சார்ஜ் செய்யுங்கள்

*E.C செய்யவேண்டிய நிலை வந்தால் முடிந்த வரை நன்றாக தெரிந்த கடையில் மட்டும் செய்யவும் இல்லை என்றால் உங்கள் சகோதரர்களை அல்லது ஆண் நண்பர்களை விட்டு செய்ய சொல்லவும்

*பேருந்தில் அல்லது கூட்டமாக உள்ள இடத்தில் சத்தமாக உங்கள் நம்பரை சொல்லாதிர்கள்

*தெரியாத நபர்களிடம் நம்பர் தராதீர்கள்.உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் நண்பர்கள் உங்கள் நம்பரை யாரிடமும் கொடுக்ககூடாது என சொல்லுங்கள்

*தவறான SMS வந்தால் யார் என கேட்டு பதில் அனுப்பாதிர்கள் , அப்படி அனுப்பினால் அதுமுலமாக உங்களிடம் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள்.

*WRONG CALL வந்தால் உடனடியான துண்டித்து விடுங்கள், அடிகடி வந்தால் வீட்டில் உள்ளவர்களை அல்லது உங்களுக்கு நம்பிக்கையான ஆண்களை பேச சொல்லுங்கள்.

*பேருந்தில் அமர்ந்து SMS அனுப்பினால் சுற்றுபுறம் பார்த்து அனுப்புங்கள், நீங்கள்அனுப்பும்  செய்தியை  அடுத்தவர்கள்  படிக்க வாய்ப்புள்ளது.

*மொபைலை பழுது பார்க்க கொடுத்தால் அதில் உள்ள SIM கார்டு மற்றும் Memory Card இரண்டையும் கழட்டிவிட்டு கொடுக்கவும், இல்லை எனில் நீங்கள் அழித்த புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தையும் திருப்ப எடுத்துவிடுவார்கள்

முக்கிய பின்குறிப்பு : இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும்.

இது போன்ற பயனுள்ள செய்தியை எனக்கு தொடர்ந்து வழங்கி வரும் எனது நண்பர் தினேஷ் அவர்களுக்கு நன்றிகள் பல..

Wednesday, 14 September 2016

நல்ல நோட்டுக்களுக்கென்றே சில பாதுகாப்பு அம்சங்கள்...!!!

இன்று நான் பகிரவுள்ள தகவல் எனது நண்பர் மூலம் எனக்கு அறிய கிடைத்தவை..இதனை தங்கள் பார்வைக்கும் கொணர்வதன் நோக்கமே இப்பதிவு..

Monday, 12 September 2016

செல்வாக்கு நிறைந்த பெண்கள் பட்டியலில் 8 இந்தியர்கள்...!!

நியூயார்க்: ஆசியாவின் செல்வாக்கு நிறைந்த பெண்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 8 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

த்ரான்ஸ் அன்ட் பெடல்ஸ்

      த்ரான்ஸ் அன்ட் பெடல்ஸ்

சிறுவன் ஒருவன் தனது வீட்டிற்க்கு அருகே உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்பொழுது பெரி பழங்கள் நிறைந்த தோட்டத்தைப்பார்த்து ஈர்க்கப்பட்டான்.பின்பு அந்த பழங்களை பரிக்கச் சென்றான்.அந்த பெரி செடிக்கு முன் முட்கள் நிறைந்த செடிகளும் படர்ந்திருந்தது.தன் இரு கரங்களையும் நீட்டி முட்களையும் பொருட்படுத்தாமல் பழங்களை பரித்தான்.
பின்பு ஒரு முள் அவனை கடுமையாக தாக்கியது.அழுது கொண்டே தன் அம்மாவிடம் ஓடி சென்று நடந்ததை கூறினான்.``தம்பி வாழ்க்கையில் பெறுவதற்க்காக நீ சிலவற்றை இழக்கத்தான் வேண்டும்.அந்த காயங்களுக்கு பின்னும் சுவையான இந்த பழங்கள் உனக்கு கிடைத்ததல்லவா?.பழங்களை பரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் முன்னே இருந்த முட்களை நீ கவனிக்கவில்லை’’ என்றார்.ஆகையால் ஒன்றை பெற வேண்டுமெனில் சில தடைகளை நாம் தாண்ட வேண்டும் என்பதனை அவன் இந்தன்மூலம் தன் தாயிடமிருந்து கற்றுக்கொண்டான்.

தி டிஸ்ஹானஸ்ட் பியர்

 தி டிஸ்ஹானஸ்ட் பியர்
ஒரு முறை சிங்கத்தை சந்தித்தை பார்த்து நரி அவதூராக பேசியது.அதனைக் கேட்ட சிங்கம் அந்த நரியை வெறிகொண்டு விரட்டுயது.

வழியில் கரடியை பார்த்து நரி உதவி கேட்டது.கரடியும் ``நீ என்னுடைய குகையில் தாராலமாக ஒலிந்து கொள்ளலாம்’’ என்றது.நரியும் குகைக்குள் சென்று ஒலிந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தது.அப்பொழுது அங்கே வந்த சிங்கம் கரடியிடம் ``இங்கே நரி ஏதாவது வந்ததா?’’ என்று வினவியது.அதற்க்கு கரடி ``இல்லை’’ என்று தன் வாயால் கூறி க் அசைவின் மூலம் நரியின் இருப்பை சிங்கத்திற்க்கு காட்டியது.
ஆனால்,சிங்கத்தால் அதனை புரிந்து கொள்ள இயலாமல் சென்றுவிட்டது.வெளியே வந்த நரியிடம் நீ என்னிடம் நன்றி கூற மாட்டாயா? என்று கேட்டது அந் கரடி.அதற்க்கு நரி எதற்க்கு நன்றி நீ பொய் கூறியதற்க்கா? அல்லது சகை காட்டியதற்க்கா? என்று கூறி சென்றது.


Sunday, 11 September 2016

உலகின் முதல்...?????


உலகில் முதன் முதலாக பயன்படுத்தப்பட்ட சிலவற்றின்  நிழற்படத்தை  இங்கு தொகுத்து உள்ளேன்..!! 

தன்னம்பிக்கை 8


Image result for ramayana kaaviyam photos


(தன்னம்பிக்கை தொடர்கின்றது…)
   
    நிறைய பேச வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சொல் பேசினாலும் மனதிற்கு நிறைவாகப் பேச வேண்டும். இல்லையென்றால் மவுனமாக இருப்பது உத்தமம்.
    
   பன்னீராயிரம் பாடல்களைக் கொண்ட ராமாயணத்தில் சத்ருக்கனன் எங்கே பேசுகிறான்? அவன் வாய்திறந்து பேசியதாக ஒரே ஒரு பாடலைத்தானே கம்ப காவியத்தில் நாம் காண முடிகிறது.
    
    வனவாசம் சென்ற ராமன், பதினான்கு ஆண்டுகள் ஆகியும் நாட்டுக்குத் திரும்பிவரவில்லை. எனவே, பரதன் ஏற்கனவே ராமனிடம் சொல்லியிருந்தபடி நெருப்பில் வீழ்ந்து உயிரைத் துறக்க முடிவு செய்கிறான்.
     
    நாட்டின் பொறுப்பை ஒருவரிடம் தந்து, அதை ராமனிடம் ஒப்படைக்கச் செய்ய வேண்டும். எனவே சத்ருனக்கனனை அழைத்து, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறான்.
     
    அப்போதுதான் சத்ருக்கனன் அந்த முழுக்காவியத்திலும் முதன் முறையாக வாய்திறந்து ஒரே ஒரு பாடல் மூலம் தன் கருத்தைத் தெரிவிக்கின்றான்.

                                            
                            (தொடரும்..)

Saturday, 10 September 2016

அம்மா என்று அழைப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை…!!!


Image result for அம்மா

இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறையில் பயின்று வரும் கோ.ஐஸ்வர்யா அவர்களின்  சொந்த படைப்பில் உருவான கவிதையினை  பகிரவுள்ளேன்…!!!

கல்லாய் இருந்த என்னை
சிலையாய் செதுக்கினாய்..!!

கரியாய் இருந்த என்னை
வைரமாய் உருவாக்கினாய்..!!

வற்றிய கால்வாயாக இருந்த என்னை
வற்றாத நதியாக மாற்றினாய்..!!

துன்பத்தை எல்லாம் நீ எடுத்துக் கொண்டு
இன்பத்தை மட்டும் எனக்களித்தாய்..!!

இதற்கு ஈடாய் எதை தருவேன்..????
’அம்மா’ என்று அழைப்பதைத்

தவிர வேறு ஒன்று இல்லை…!!!