புதன், 22 ஜூன், 2016

நீண்ட நேரம் கணினியை பயன்படுத்துவோருக்கு..!!!





அன்றாடம் நீண்ட நேரம் கணினியை பயன்படுத்துவோருக்கு உடலில் சோர்வு,பின் கழுத்து,முதுகு மற்றும் தலைவலி,கைகள்,மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை வலி போன்ற  பாதிப்புகள் ஏற்படுகின்றன.தொடர்ந்து கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதால் இமைகளில் சிமிட்டல் குறைந்து கண்கள் உலர் தன்மை அடைகின்றன.இதனால் கண்களில் உறுத்தல்,எழுத்துகள் இரண்டாகவும் பலவாகவும் தெரிதல்,பார்வைத் தெளிவற்றுத் தோன்றுதல் போன்ற சிரமங்கள் ஏற்படுகின்றன.இந்நிலைகளை தவிர்க்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

1.கணினி உபயோகிப்போர் உட்காரும் நாற்காலி.உயரத்தை வேண்டுமளவு ஏற்றவும் இறக்கவும் தகுந்ததாக இருக்க வேண்டும்.நிமிர்ந்து உட்காரும்போது முதுகுக்குப் பொருத்தமாகவும்,உட்காரவும்,சாய்மானத்திலும் போம் வைத்து இருக்க வேண்டும்.கைகளைச் சமநிலையில் வைக்க நாற்காலியில் கைத்தாங்கி வைத்தும் இருக்க வேண்டும்.

2.கணினி விசைப்பலகையிலும் திரையிலும் நல்ல வெளிச்சம் இருக்கும்படி விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்.

3.கண்கள் கூசும் ஒளிவீச்சு இருந்தால் கணினியின் இருப்பிடத்தை மாற்றியமைக்க வேண்டும்.

4.கணினியின் திரைக்கு வெகு அருகில் செல்லாமல் சற்றுத் தூரத்தில் இருந்தபடி(சுமார் 33 செ.மீ) பார்த்து வேலை செய்ய வேண்டும்.



5.கண் மருத்துவரிடம் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறையாகப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.40 வயதுக்கு மேல் கண்கள் பரிசோதனையின் போது ’கிளக்கோமோ’ பாதிப்பு இருக்கிறதா என்று அறிய கண்களின் நீர் அழுத்தத்தையும் பரிசோதிக்க வேண்டும்.

6.தேவையானால் கண் தசைகளில் ஒருங்கிசைவை கண் மருத்துவமனைகளில் பரிசோதித்துக் கொள்ளலாம்.வேண்டுமென்றால் பயிற்சியும் எடுத்துக்கொள்ளலாம்.

7.கணினியில் வேலை செய்யும்போது அவ்வப்போது கண்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம்.தொடர்ந்து கணினித் திரையையே பார்த்துக் கொண்டிராமல் இடையிடையே ஜன்னல் வழியாகத் தூரத்தில் உள்ள பொருளையோ,வானத்தையோ வேடிக்கை பார்க்கலாம்.

4 கருத்துகள்: