Skip to main content

பெரியார் மாவட்டம் தான் ஈரோடு...!!!
ஈரோடு மாவட்டத்தில் 17.09.1879 அன்று வெங்கட நாயக்கர்-சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் தான் தந்தை பெரியார்.

சமுதாயத்தில் சாதி,சமயம்,வேறுபாடு அகலவும் மூடநம்பிக்கை முற்றிலுமாக ஒழியவும்,மனிதநேயம் தழைக்கவும் பாடுபட்ட மாமேதையாவார்.

ஈரோடு  நகர மன்றத்தின் தலைவராக இருந்து எண்ணற்ற சாதனை புரிந்தார்.

தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றினார்.

கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமையினை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

1925-ல் சுயமரியாதை இயக்கம் கண்டார்.குடியரசு ஏட்டை துவக்கினார்.

1927-ல் வருணாசிரமம் ஒழிந்தால் தான் தீண்டாமை ஒழியும் என்று காந்தியாரிடம் வாதாடினார்.

1937-ஆம் ஆண்டு கட்டாய இந்தியை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

1938-ல் சென்னையால் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் ’பெரியார்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

1944-ல் சேலம் மாநாட்டில் நீதிக்கட்சி ,திராவிடர் கழகமாக பெயர்  மாற்றம் பெற வகை செய்தார்.

1950-ல் பெரியார் பொன்மொழிகள் நூலுக்காக ஆறுமாதம் சிறைத் தண்டனை விதிக்கப் பெற்று பத்து நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

1951-ல் வகுப்புரிமைக்காகக் கிளர்ச்சி நடத்தி இந்திய அரசியல் சட்டத்தை முதன் முறையாகத் திருத்தச் செய்தார்.

1967-ல் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள்,’யான் பெற்ற அரசு என் தந்தைக்குரிய பரிசு’ என்று குறிப்பிட்டு தமது ஆட்சியையே தந்தை பெரியாரின் பெரும் சமுதாயப் பணிக்கு காணிக்கையாக்கினார்.

1970 ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் விருது வழங்கி  பாராட்டியது.

தந்தை பெரியார் தமிழகத்தின் வரலாற்றில் ஓரு சகாப்தமாக காலகட்டமாக திருப்பு முனையாக திகழ்ந்தவராவார்.

டிசம்பர் 19 அன்று சென்னை தியாகராய நகரில் சொற்பொழிவு ஆற்றினார்.அதுவே அவரது இறுதிச் சொற்பொழிவு.அதுவே அவரது மரண சாசனம்.

டிசம்பர் 24 காலை 7.22 மணிக்கு தந்தை பெரியார் தம் 95-ம் அகவையில் மறைந்தார்.அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டது.

டிசம்பர் 25 அரசு மரியாதையுடன் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாலை 4.57 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அடக்கம் செய்யப்பட்டது.


1974-ல் தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு ’எம்.வி.தமிழ்ப் பெரியார்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

1975-ல் ஈரோட்டில் பெரியார் வாழ்ந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு பெரியார்-அண்ணா நினைவகமாக ஆக்கப்பட்டது.

இப்படிப்பட்ட ஒரு சமூக சீர்த்திருத்தவாதி பிறந்து வாழ்ந்த இம்மண்ணில் நானும் பிறத்தேன் வளர்கிறேன் என்பதில் பெருமிதமாக உள்ளது.

என்னுடைய ஊரு ஈரோடுங்க…!!!!

Comments

 1. Replies
  1. வருக ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா..

   Delete
 2. மகிழ்ச்சி...

  ReplyDelete
  Replies
  1. வருக ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

   Delete
 3. இப்படிப்பட்ட கட்டுரைகளை தரும் உங்களையும், உங்கள் தோழிகள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுகள். கல்லூரி மாணவிகள் இப்படி வலைப்பக்கம் எழுதுவது மிகவும் மகிழ்வாக இருக்கிறது. தங்களுக்கு விருது கிடைத்ததற்கும் பாராட்டுகள் வைசாலி

  ReplyDelete
  Replies
  1. வருக ஐயா.தங்களின் மறுமொழிக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.தங்களை போன்றவரின் ஆதரவு இருகையில் எனது சகோதரிகள் இதுப் போன்று சுவையான பதிவுகளை இந்த வலை உலகில் சுவைக்க தந்துக் கொண்டே இருப்பார்கள் ஐயா.நன்றி ஐயா.

   Delete

Post a Comment

Popular posts from this blog

சிக்கனமும் சேமிப்பும்

சிறு துளி பெறுவெள்ளம் போல       சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்!
சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும்!       ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை!
ஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை!       உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை
தாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால்       சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்
நீ வாழ்க்கை என்னும் படியை
வெற்றியுடன் தாண்ட முடியும்!
சேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ

அறுவகைப் பெயர்கள்

                            அறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை                             பொருட்பெயர்                             இடப்பெயர்                             காலப்பெயர்                             சினைப்பெயர்                             குணப்பெயர்                             தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும். 

எடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.

எடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.


எடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.எடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்