பலத்துறைச் சார்ந்த காணொலிகள்..!!!
பலத்துறைச் சார்ந்த காணொலிகள் ஒரே இடத்தில் காண இயலக்கூடிய  வலைப்பக்கம் குறித்த பதிவாக இப்பதிவு அமையவுள்ளது.சமீபத்தில் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறைக்கு சென்று இருந்தோம்.அங்கு கான் அகாடமி என்ற வலைப்பக்கம் குறித்தும் அவற்றில் பலத்துறைச் சார்ந்த காணொலிகள் பற்றியும் வகுப்புகள் நடைபெற்றன.
இணைத்தள முகவரி; http://www.khanacadamy.org
இங்கு தான் காணொலிகள் உள்ளன.ஆனால் அவை அனைத்துமே ஆங்கில மொழியில் தான் இருக்கும்.இதனை தமிழில் உள்ளடக்க காணொலிகளாக்கும் பயிற்சி தான் எங்களுக்கு வழங்கப்பட்டது.இப்பதிவை படிக்கும் அனைவரும் தங்களால் முடிந்த வரை இதில் இருக்கும் காணொலிகளை நமது தாய்மொழியாக்கி பிறக்கும் பயனுள்ளதாக மாற்ற உதவுங்கள்.இதனை தமிழ்க் கல்விக் கழகத்தைச் சேர்ந்த கௌதம ராஜன் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.

மிக எளிமையாக இதனை தமிழ் மொழியில் மொழிப்பெயர்க்கலாம்.அதற்கான உதவிகளை கௌதம் ஐயா வழங்குவார்.ஆர்வமுள்ளவர்கள் அவரை தொடர்ப்புக் கொண்டு நமது பாரதியார் கூறியப்படி,
சென்றிடு வீர்எட்டுத் திக்கும்-கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்..!!!
 எனது சகோதரிகளும் நானும் சேர்ந்து கல்லூரி மறுத்திறப்பானதும் இப்பயிற்சியில் தான் களமிறங்க உள்ளோம்.தாங்களும் இதனை மொழிப்பெயர்க்க உதவுங்கள்.மிகவும் எளிதாக மொழிப்பெயர்க்கலாம் வாருங்கள்,இணைந்து செயல்படுவோம்.நம் தமிழ் மொழியின் ஒலியை உயர்த்திடுவோம்.
ஆர்வமுள்ளவர்கள் தொடர்ப்புக் கொள்ளுங்கள்;
பெயர்; கௌதம ராஜன்,
தமிழ்க் கல்வி உள்ளடக்கம் காணொலிகளை உருவாக்கல்,
மின்னஞ்சல் முகவரி; mrpgowtham@gmail.com
தொலைபேசி எண்;9003573957


Comments

  1. நல்லதொரு தகவல் வைசாலி. பகிர்கின்றோம். மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு

    ReplyDelete
    Replies
    1. வருக ஐயா.தங்களின் மறுமொழிக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா.பகிருங்கள் தமிழின் ஒலியை உயர்த்திடுவோம்.நன்றிகள் ஐயா.

      Delete

Post a Comment