Wednesday, 30 March 2016

யான் வாசித்து வரும் வலைப்பக்கங்கள்..!!


Image result for blogger symbol of b

வலைப்பதிவர் நா.முத்து நிலவன் ஐயா,தனது வலைப்பக்கத்தில் தொடரும் தொடர் வலைப்பதிவர் என்று ஒரு பதிவை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரம்பித்தார்.
அதனை பின்பற்றி  சில தொடர் பதிவுகள் எழுதப்பட்டன.அதில் எங்கள் கல்லூரி வலைப்பக்கத்தை அவரும்  வலைப்பதிவர் பரிவை.சே.குமார் ஐயாவும் அடையாளப்படுத்தினர்.இதுக் குறித்து நான் பெருமைப்படுகிறேன்.அவர்களுக்கு எனது மனநிறைவான நன்றிகள்.

யான் வாசித்து வரும்  வலைப்பக்கம்  இந்த பதிவில்  நான் எழுத இருப்பது.கடந்த ஆறு மாதங்களில் நான் வாசித்த வலைப்பக்கமும் அதன் சுருக்கமும் பகிரவுள்ளேன்.காரணம் நான் இந்த வலை உலகில் புதிய வலைப்பதிவர்.இதில்  நான்  சுவாசித்த வலைப்பக்கம்  இல்லை   என்னை செதுக்குக்கின்றன  எழுத்தாணிகளைக்  குறித்து பகிரவுள்ளேன்.

1.நான் வலை உலகிற்கு வரும் முன்னரே முதலில்  சுவாசித்த வலைப்பக்கம்  எனது தமிழ் ஆசிரியரின் வலைப்பூவைத் தான்.இந்த வலைப்பூவில் சங்க இலக்கியங்கள் அழகாக பூத்துக் குலுங்கியதைக் கண்டு மிரண்டு போனேன்.
வேர்களைத் தேடி…http://gunathamizh.com

2.அழகிய கவிதை நடையில் தமிழ் எழுத்துகளால் என்னை வருடிய வலைப்பூ,அதில் நான் அழகிய தமிழ் எழுத்துகளை அறிந்துக் கொண்டேன்.
நான் ஒன்று சொல்லுவேன்…http://naanselva.blogspot.com

3.எனக்குள் இருக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தும் வலைப்பதிவர் இருக்கிறார் என்று சந்தோஷ சாரலில் நனைந்து  தொடர்கிறேன்.ஒரு  சமூக விழிப்புணர்வு மற்றும் பொழுது போக்கு பதிவர்.
வளரும் கவிதை…http://valarumkavithai.blogspot.com

4.பெண்களிலும் விழிப்புணர்வு பதிவர் இருப்பார்களா என்று வியந்து பின் தொடர ஆரம்பித்தேன்.
தேன் மதுர தமிழ்..http://theanmaduratamil.blogspot.com

5.நான் இரசித்த பெண் வலைப்பதிவர் அனைத்தும் சார்ந்த பதிவுகளை தந்து அசத்தும் வலைப்பூ.
கீத மஞ்சரி..http://geethamanjari.blogspot.com

6.இவருடைய வலைப்பூவிற்கு இட்டப் பெயரை கண்டு அதிர்ச்சியானேன்.இவரின் பதிவுகள் நகைச்சுவையோடும்  தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிக்கொண்டே நமக்கு தெரியாத விஷயங்களை அழகாக பகிர்ந்துக் கொண்டு வருகிறார்.
கில்லர்ஜி..http://killergee.blogspot.com

7.மொத்தம் பத்து வரிகளையோ பதினைந்து வரிகளையோ கொண்டு தான் இவரின் பதிவு இருக்கும். நகைச்சுவைக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்ப்பு உண்டு என்று நான் நினைத்தது உண்டு.ஒவ்வொரு வரியும் சிந்திக்க வைக்கும்.
ஜோக்காளி..http://jokkaali.blogspot.com

8.அட இவரா..!!இவரைப் பற்றி நான் சொல்வது பொழுது போக்கில்  சிந்திக்க வைத்தவர்.
வலிப்போக்கன்..http://valipokken.blogspot.com

9.தனது அனுபவத்தை இவரின் வலைப்பூவின் பெயருக்கு ஏற்றவாறு  எனக்கு  நல்ல உணவு சமைத்து விருந்துண்டது போல இருக்கும்.
கூட்டாஞ்சோறு..http://senthilmsp.blogspot.com

10. புகைப்படத்திலே எண்ணத்தை காட்சியளிக்கும் வலைப்பூவில் கனவு காணச் சென்று வருவேன்.
எனது எண்ணங்கள்..http://tthamizhelango.blogspot.com

11.கல்வியில் எனக்கு உண்டான மாற்றுக் கருத்துக்கு ஏற்றவாறு இவரின் வலைப்பூவைக் கண்டேன்.
மூங்கில் காற்று..http://tnmurali.com

12.பஞ்ச பாண்டவர்கள் போல ஐந்து வலைப்பதிவர்களால் பாஸிடிவ் செய்திகள் மற்றும் உணவு தொடர்பான பதிவுகள் அட்டகாசம்.
எங்கள் Blog..http://engalblog.blogspot.com

13.யான்பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பது போல தான் சந்தித்த அனுபவத்தை புகைப்படங்களாலும் தனது எழுத்தாலும் தருவதை இரசித்து தொடர்கிறேன்.
சந்தித்ததும் சிந்தித்ததும்..http://venkatnagaraj.blogspot.com

14.பல்சுவை தொடர்களால் நானும் தொடர்கிறேன்.
நான் பேச நினைப்பதெல்லாம்..http://chennaipithan.blogspot.com

15.தமிழன்னடா சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல தமிழில் அறிய பதிவுகளை தொடுத்துக் கட்டும் பூமாலையில் வாசனையை உணர்ந்தேன்.
ரூபனின் எழுத்துப்படைப்புகள்..http://trtamilkkavithaikal.com

16.விசுவாசத்திற்கு இவர் ஒரு உதாரணம்.சமூக விழிப்புணர்வு பதிவர்.
விசிAwesom மின்துணிக்கைகள்..http://vishcornelius,blogspot.com

17.கட்டுரைகளை அடுக்கி சிந்திக்க வைக்கும் ஒரு வலைப்பக்கம்.கிராமிய மணம் வீசி என்னை அழைத்தது.
மனசு..http://vayalaan.blogspot.com

இன்னும் நிறைய வலைப்பக்கமுள்ளன.ஏதோ தெரியவில்லை இந்த எழுத்தாணிகளே என்னை நகரவிடாமல் படிக்கும் ஆர்வத்தை தூண்டி எழச்செய்தது.நான் இந்த வலையுலகில் இவர்களைப்  போன்ற வலைப்பதிவர்களின் விரலைப் பிடித்துக் கொண்டு பயணம் செய்கிறேன்,தொடர்ந்து செய்வேன்.இப்பதிவு நீண்டுவிட்டது என்பதால் இங்கு  முடித்து விடுகிறேன்,தொடர்ந்து தொடர்வேன்.நன்றி.


23 comments:

 1. #நகைச்சுவைக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்ப்பு உண்டு என்று நான் நினைத்தது உண்டு#
  அவ்வ்வ்வ்வ்வ்வ் நினைப்பு தவறாயிடிச்சா :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.என் நினைப்பு தவறவில்லை ஐயா,பாருங்க தற்பொழுது கூட தாங்க நகைச்சுவையாக மறுமொழி தந்துள்ளீர் ஐயா.

   Delete
 2. தலைப்பை கவனிக்கவும். யாசித்து > வாசித்து என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இங்கு எனது வலைத்தளம் பற்றியும் குறிப்பிட்ட தங்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருக ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.தங்களின் மறுமொழியின் படி தலைப்பை மாற்றியுள்ளேன் நன்றி ஐயா.

   Delete
 3. Replies
  1. தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

   Delete
 4. வாழ்த்துக்கள் சகோதரி...
  நல்ல எழுத்து தொடரட்டும் உங்கள் பணி...
  எனது வலைக்குமான அறிமுகத்துக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருக ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றிகள் ஐயா.

   Delete
 5. உங்கள் வாசிப்பு பட்டியலில் எனது தளமும் இருப்பது கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து வலைப்பூக்களில் சந்திப்ப்போம்.

  ReplyDelete
  Replies
  1. வருக ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.தொடர்ந்து சந்திப்போம் ஐயா.

   Delete
 6. நல்ல முயற்சி வைசாலி தொடா்க.

  ReplyDelete
  Replies
  1. எனது ஒவ்வொரு முயற்சியும் அதனால் நான் அடையும் ஒவ்வொரு வெற்றிக்கும் முதலில் சொந்தக்காரர் தாங்கள் ஒருவர் மட்டுமே ஐயா.தங்களின் மறுமொழிக்கு நன்றிகள் ஐயா.

   Delete
 7. இந்த வலையுலகில் இவர்களைப் போன்ற வலைப்பதிவர்களின் விரலைப் பிடித்துக் கொண்டு பயணம் செய்யுங்கள்...நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருக ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.நிச்சயம் எனது பயணத்தை தங்களை போன்றோரோடு தொடர்வேன் ஐயா.

   Delete
 8. எம்மையும்கூட இணைப்பிலிட்டமைக்கு மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
  Replies
  1. வருக ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

   Delete
 9. அட! எல்லாமே நாங்கள் தொடரும் நம்ம நண்பர்கள், சகோதர சகோதரிகள்!!! அருமையான வலைத்தளங்களைத்தான் தொடர்கின்றீர்கள். வாழ்த்துகள் சகோ வைசாலி. உங்கள் ஆசிரியர் குணா அவர்கள் உட்பட...

  உங்களைப் போன்ற இளம்வயதினர் பலர் படைப்புலகிற்கு வர வேண்டும். வாழ்த்துகள்!

  சமீப நாட்களாக வேலைப்பளுவால் வலைப்பக்கம் வர இயலவில்லை. தொடர்கின்றோம் இனி.

  ReplyDelete
  Replies
  1. வருக ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.தங்களை போன்றோரின் தொடர் ஆதரவு இருக்கையில் எங்களின் படைப்புகள் இவ்வலையில் தொடர்ந்து வரும் ஐயா.மீண்டும் நன்றிகள் ஐயா.

   Delete
 10. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வலைப்பதிவர்களில் வெகுசிலரையே அறிந்திருக்கிறேன். வாசித்திருக்கிறேன். மற்றவர்களின் வலைப்பக்கங்களுக்கும் பயனிக்கிறேன். அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 11. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வலைப்பதிவர்களில் வெகுசிலரையே அறிந்திருக்கிறேன். வாசித்திருக்கிறேன். மற்றவர்களின் வலைப்பக்கங்களுக்கும் பயனிக்கிறேன். அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நல்லது ,தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.தொடருங்கள் நானும் தொடர்கிறேன் மீண்டும் நன்றிகள் ஐயா.

   Delete
 12. தங்களால் பல நல்ல பதிவுகள் பற்றி அறிந்து கொண்டேன் நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருக அம்மா.தங்களின் முதல் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றிகள் அம்மா.

   Delete