Skip to main content

கணித்தமிழ்ப் பேரவை தொடக்கவிழா


கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் இன்று (02.03.16 ) கணித்தமிழ் பேரவையின் தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை தாளாளா் அரிமா கே.எஸ்.ரங்கசாமி எம்ஜே.எப் அவா்கள் தொடங்கிவைத்தாா். விழாவில் செயலாளா் திரு ஆா் சீனிவாசன் அவா்களும், செயல் இயக்குநர் திருமதி கவிதா சீனிவாசன் அவா்களும் முன்னிலை வகித்தனா். முதல்வர் முனைவா் மா.காா்த்திகேயன் அவா்கள் வாழ்த்துரை வழங்கினாா். கணித்தமிழ்ப் பேரவையைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றிய தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணை இயக்குநரும் கணித்தமிழ்ப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி அவா்கள் கணித்தமிழின் தேவையை எடுத்துரைத்து. இணையத்தில் தமிழை உள்ளீடு செய்வதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தாா். மாணவா்கள் கணித்தமிழ் குறித்த பல்வேறு நுட்பங்களையும், வலைப்பதிவு, விக்கிப்பீடியா, குறுஞ்செயலிகள், மென்பொருள்கள் என பல வழிகளிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்தும் முறைகள் குறித்து அறிந்துகொண்டனா். கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளா் முனைவா் இரா.குணசீலன் அவா்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுபெற்றது.

Comments

 1. நமது கல்லூரி தாளார்,செயலாளர்,செயல் இயக்குநர் மற்றும் முதல்வர் ஐயா அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா.எங்களை நாங்கள் அடையாலப்படுத்திக் கொள்ள ஒரு மேடையை ஏற்படுத்திக் கொடுத்தற்கு நன்றிகள் ஐயா.இதன் மூலம் நம் மொழி உயர்வடையும் என்பது குறித்து பேரின்பம் ஐயா.இன்று சிறப்பு உரை வழங்க வந்த தமிழ்பரிதி ஐயா தனது சிறப்புரையை பயனுள்ளதாக அமைத்து பேசினார்.மேலும் விக்கிப்பீடியாவில் தமிழின் முக்கியத்துவமும் அதில் நம் மொழி முதல் இடத்திற்கு வரவேண்டும் என்று அவர் கூறுகையில் நமது கல்லூரிக்கும் அதில் பங்குள்ளது என்பதில் பெருமையாக உள்ளது.

  மிகவும் நன்றி முனைவர்.இரா.குணசீலன் ஐயா அவர்களே.தங்களால் தான் எங்களுக்கு இணையத்தில் தமிழ் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. மேலும் தங்களின் வழிக்காட்டுதலும் உறுதுணையும் ஊக்கமும் இருக்கையில் நிச்சயம் பாரதியார் கூறிப்படி எல்லாத்துறையிலும் எல்லா மொழியிலும் உள்ள அறிவை தமிழில் மொழிப்பெயர்த்து அனைவரும் எளிமையாக அறியும் வகையில் அமைக்க இயலும் ஐயா.

  நன்றிகள் பல ஐயா.வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

  ReplyDelete
 2. இன்று நடைபெற்ற விழாவில் உரையாற்றிய தமிழ்பாிதி ஐயா எங்களுக்கு பல சிந்தனைகளை கொடுத்துள்ளாா். அவா் கூறிய படி நாங்கள் வலையதளத்தில் தொடா்ந்து எழுதி தமிழை முன்னிலைப் படுத்துவோம் ஐயா.

  ReplyDelete
 3. its really a new technique of learning a new things in an interesting way for both students and staff society.hearty congratulation for all of you. All the Best for successful journey.

  ReplyDelete
 4. சிறப்பு விருந்தினர் ஆற்றிய உரையை சுருக்கமாக இப்பதிவில் தொகுத்திருக்கலாமே. நேரம் கிடைக்கும் போது உங்கள் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள பேரவை குறித்தும் அதன் நோக்கங்கள் குறித்தும் விரிவாக எழுதுங்களேன். பலருக்கும் பயனுள்ளதாகவும் இதேப் போன்ற முயற்சிகளை மற்ற கல்லூரிகளில் முன்னெடுப்பதற்கும் உந்துதலாக இருக்கும். கல்லூரி நிர்வாகத்தினர், ஆசிரியர், மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தமிழ்த் துறையோடு மட்டுமல்லாமல் பிற துறைகளும் இதற்கு எப்படி பங்களிக்கலாம் என சிந்தித்து செயல்படுத்துவது அடுத்த அடியாக இருக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வருக ஐயா.காலதாமதமான பதிலுறைக்கு மன்னியுங்கள்.இந்த வலையில் எழுதும் ஒவ்வொரு மாணவிகளுமே தமிழ்த்துறையில்லா மாணவிகளால் தான் எழுதப்பட்டு வருகிறது ஐயா.நேரமிருக்கும் போது இதன் நோக்கத்தை தொகுக்கிறோம் ஐயா.நன்றி.

   Delete

Post a Comment

Popular posts from this blog

சிக்கனமும் சேமிப்பும்

சிறு துளி பெறுவெள்ளம் போல       சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்!
சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும்!       ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை!
ஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை!       உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை
தாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால்       சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்
நீ வாழ்க்கை என்னும் படியை
வெற்றியுடன் தாண்ட முடியும்!
சேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ

அறுவகைப் பெயர்கள்

                            அறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை                             பொருட்பெயர்                             இடப்பெயர்                             காலப்பெயர்                             சினைப்பெயர்                             குணப்பெயர்                             தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும். 

எடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.

எடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.


எடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.எடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்