புதன், 2 மார்ச், 2016

வியக்க வைக்கும் எறும்புகள்

           வியக்க வைக்கும் எறும்புகள்


முன்னுரை

எறும்புகள் வரிசையாக போவதைப் பார்த்து நாம் வியப்படைந்ததுண்டு. நாம் அதை சில நேரங்களில் கலைத்துவிட்டு மகிழ்ச்சி அடைவதுண்டு. எறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை குலையாமால் போவதிற்கு  காரணம் வாசனைதான். 
வாசனையால் பின் தொடரும் எறும்பு
முன்னாள் போகும் எறும்பு ஒருவித வாசனையை தரையில் அல்லது சுவரில் விட்டுச் செல்கிறது. பின்னால் வரும் எறும்புகள் அந்த வாசனையை முகர்ந்து கொண்டு ஒரே வரிசையாக செல்கின்றன. எறும்புகள் வரிசையாக செல்வதை  நீங்கள் பார்த்தால் அவற்றின் பாதையில் ஒரு இடைவெளி கிடைத்தால் அந்த இடத்தை தேய்த்து விட்டால், அப்போது அங்கு வரும் எறும்புகள் சற்று தடுமாறும். முன்னால் சென்ற எறும்பு விட்டுச் சென்ற அதற்கு வாசனை கிடைக்காமல் போவதுதான் இதற்கு காரணம். எறும்புகளுக்கு கண் உண்டு. ஆனாலும் வாசனையை வைத்துதான் வரிசையாக செல்கின்றன. 
ஒற்றுமையே பலம்
  ஒற்றுமையே பலம் சொன்னது நாம் தான். ஆனால் நாம் ஒற்றுமையாக இருக்கிறோமா என்றால் அது கேள்விக்குறிதான். ஆனால் மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களும் ஒற்றுமையாகத் தான் இருக்கின்றன. எறும்பைப் பார்த்தோம் என்றால் அது நமக்குப் புலப்படும்.அவற்றை போன்று ஒழுங்கான உயிரினத்தை பார்ப்பது கடினம். எல்லாமே மிகவும் சிநேகிதமாக இருக்கக்கூடியவை. எறும்புகள் தங்கள் கூட்டுக்குள் பூச்சிகளை கட்டிப்போட்டு வளர்கின்றன. சில எறும்புகள் மற்ற எறும்புகளின் கூட்டுக்குள் சென்று அங்கிருக்கும் எறும்புகளை கடத்தி வந்து அடிமைகளாக வைத்துக் கொள்கின்றன. 
ராணுவ அதிகாரிகள் வியப்பு
 எறும்புகளின் செயல்களைக் கண்டு ராணுவ அதிகாரிகளே வியப்பில் ஆழ்ந்ததுண்டு. இவ்வளவு சிறிய உயிரினத்துக்கு இந்த ஒற்றுமையை யார் சொல்லித் தந்தார் என்று நாமே வியப்பில் ஆழ்வதுண்டு.அவற்றிலும் ஆக்கிரமிப்பு உண்டு. நமக்கு படைகள் அதற்கு அதிகாரிகள் இருப்பது போன்று ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா எறும்பு வகைகள், ராணுவ அதிகாரிகள் வியக்கும்படி, தங்களது படைகளை படு எச்சரிக்கையுடன் நடத்திச் செல்கின்றன. அவைகளில் முன்னணிப்படை, பக்கவாட்டுப் படை, ஒற்றர்கள் எல்லாம் உண்டு. 
எறும்புகளின் ஆயுதம்

உடவை கச்சிதமாக அடுக்கி வைக்க சின்னக்குச்சி, இலை நுனி போன்றவற்றை ஆயுதமாக உபயோகிக்கும் எறும்புகளும் உண்டு. இவை எல்லாமே கூட்டமாக இருக்கும் போதுதான். தனி எறும்பு என்று பார்த்தால் ஒன்றுக்கும் பயன்படாத பூஜ்யம்தான். எறும்புகளில் ஆயிரம் வகைகள் உள்ளன. பாலைவனத்திலும் எறும்புகள் உண்டு. கடற்கரையில், மலைச்சாரலில் காட்டில் என்று எல்லா இடத்திலும் (எவரெஸ்ட் சிகரத்தைத் தவிர) இருக்கின்றன. 20 அடி உயரத்துக்கு புற்றுகள் கட்டும் எறும்புகளும் உண்டு.

4 கருத்துகள்: