Skip to main content

தமிழ்ச்சங்கங்கள்



                                             தமிழ்ச்சங்கங்கள்


முன்னுரை

மூன்று சங்கங்கள் வைத்து முத்தமிழை வளர்த்தனர், பாண்டிய மன்னர் என்ற செய்தி பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டு வருகிறது. முச்சங்கங்கள் பற்றி ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளனர். அவர்களுள் முச்சங்கம் பற்றி விரிவான விளக்கம் தருபவர், இறையனார் களவியலுரையாசிரியர் நக்கீரர் ஆவார்.
தலைச்சங்கம்
தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூவகைப்பட்ட சங்கம் இருந்தது.  சங்கம் நிறுவப்பட்ட இடம் கடல் கொண்ட மதுரை என்பர். அதில் தலைச்சங்கமிருந்தார், அகத்தியனாரும், திரிபுரம் எரித்த சிவபெருமானும், குன்றெறிந்த குமரவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் 549 பேர் என்பர். அவர்கள் உட்பட  4449 புலவர்கள் இதில் இருந்தனர்.
நூல்கள்
 அவர்களால் பாடப்பட்ட நூல்கள் ஏராளம். பரிபாடல், முதுநாரைய, முதுகுருகு, களரியாவிரை என பல நூல்கள் இச்சங்க காலத்தில் எழுதப்பட்டன. இதன் காலம் 4440 என்பர்.
இடைச்சங்கம்

 இடைச்சங்கம் இருந்த இடம் கபாடபுரமாகும். இடைச்சங்கத்தில்  உறுப்பினர்களாக இருந்தவர்கள் அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழி, மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக்கோன், கிரந்தை போன்றோர் என 59 ஆவர். இதன் காலம் 3700 என்பர்.
நூல்கள்
அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், இசை நுணுக்கம், கலி, குருகு, வெண்டாழி, வியாழமாலை அகவல் போன்ற நூல்கள் அச்சங்கத்தில் எழுதப்பட்டன.
கடைச்சங்கம்
கடைச்சங்கம் இருந்த இடம் வட மதுரை. இதன் காலம் 9990 ஆகும். இதில் 49 பேர் உறுப்பினராக இருந்தனர். இதன் உறுப்பினர்களில் சிலர் சிறு மேதாவியர், சேந்தம் பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதனின் நாகனார், கணக்காயனார், மகனார் நக்கீரனார் போன்றோர்.
நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம், நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை போன்ற நூல்கள் இச்சங்கத்தில் எழுதப்பட்ட நூல்களாகும்.




முடிவுரை
 மேற்கூறியவற்றை பார்க்கும் போது 197 அரசர்கள் காலத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகள் மூன்று சங்கங்களும் இயங்கின என்று அறிகின்றோம். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் பாண்டிய நாட்டுச் செவ்வூர்ச் சிற்றம்பலக் கவிராயர் வீட்டு ஏட்டுச் செய்தியும் முச்சங்கங்கள் பற்றி மொழிகின்றன. அவையிரண்டும் இறையனார் களவியரலின் நக்கீரருரையைப் பின்பற்றுவன ஆகும்.


Comments

  1. சங்கங்கள் குறித்து அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். நந்தினி நீங்கள் முனைவர் குணசேகரன் அவர்களின் மகளா? தவறாக இருந்தால் மன்னிக்கவும்..

    ReplyDelete
    Replies
    1. குணசீலன் ஐயாவை என் தந்தை என்று கூறினாலும் மிகையாகாது ஐயா. என்னை மிகவும் ஊக்கப்படுத்தி என் ஒவ்வொரு வெற்றிக்கும் ஆதாரமாய் இருப்பவர் என் ஐயா தான். அவரை என் தந்தை என்று நீங்கள் கூறியதில் தவறேதும் இல்லை ஐயா. எனக்கு மகிழ்ச்சியே ஐயா. மேலும் அவரது மாணவிகள் அனைவரையும் அவரது மகளாகவே நினைப்பார்.

      Delete
  2. மன்னித்து விடுங்கள். நாங்கள் முனைவர் குணசீலன் அவர்களையும் உங்கள் பெயரையும் குழப்பிக் கொண்டுவிட்டோம். மிக்க நன்றி மீண்டும் மன்னிப்புடன்

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா. நந்தினி எங்கள் கல்லூரியில் கணிதவியல் பயிலும் மாணவி. குணசேகரன் என்பதால் தங்களுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கலாம். அதனாலென்ன எனது மாணவிகள் எல்லோருமே எனது குழந்தைகள் தான்.தங்கள் வருகைக்கும் தொடர்ச்சியான ஊக்குவித்தலுக்கும் நன்றிகள் ஐயா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிக்கனமும் சேமிப்பும்

சிறு துளி பெறுவெள்ளம் போல       சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்!
சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும்!       ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை!
ஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை!       உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை
தாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால்       சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்
நீ வாழ்க்கை என்னும் படியை
வெற்றியுடன் தாண்ட முடியும்!
சேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ

அறுவகைப் பெயர்கள்

                            அறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை                             பொருட்பெயர்                             இடப்பெயர்                             காலப்பெயர்                             சினைப்பெயர்                             குணப்பெயர்                             தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும். 

எடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.

எடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.


எடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.



எடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்