கல்லூரி காலம்

Image result for கல்லூரி காலம்

புன்னகை செய்து வரவேற்ற
முகம் தெரியாத தோழிகள்!
பின் உறவென பழகிய நிமிடங்கள்!
     போதிமரமாய் திகழ்ந்த வகுப்பறை!
பேசியே கடத்திய பாடவேளைகள்!
     புரியாத மொழியில் தாலாட்டு பாடும் ஆசிரியர்கள்!
வகுப்பறையில் என்னை கேட்காமல்
     வரும் குட்டித் தூக்கம்!
உள்ளங்கை கோர்த்து திரிந்த நாட்கள்!
     மனதின் நினைவிலிருந்து கரையாத நிமிடங்கள்!
கண்மூடித் திறப்பதற்குள் முடிந்து விட்ட
     இந்த கல்லூரிக் காலம் – இனி
கண் மூடினால் கனவில் மட்டுமே!


Comments

  1. ஆஹா! உங்களுக்கு இப்படித்தான்....// கண்மூடித் திறப்பதற்குள் முடிந்து விட்ட
    இந்த கல்லூரிக் காலம் – இனி
    கண் மூடினால் கனவில் மட்டுமே!// என்றால் 50 கடந்த எங்களுக்கு எல்லாம்...எங்கள் கல்லூரிக் காலத்து நினைவுகளை மீட்டியது உங்கள் வரிகள்

    ReplyDelete

Post a Comment