புதன், 10 பிப்ரவரி, 2016

பாரதியார்

                                         

                     
சீறிவரும் சூறாவளியை
மரங்கள் அறிமுகப்படுத்துவது போல;
தமிழுக்கு உணர்ச்சியூடும் கவிதைகளை
அறிமுகப்படுத்தியவன் நீ!

எதையும் அச்சடித்தாற் போல்
காட்சிப்படுத்தும் திறமையை - உன்
வீட்டுச் சுவரில் தொங்கும்
கண்ணாடியிடமிருந்து தான் கற்றாயோ?

உன் வீர முழக்கத்தை, பிஞ்சு குழந்தைகள்
செவி வழி கேட்டாலும்,
அரும்பாத மீசையை தான்
தடவி போருக்கு சென்றிடுமே!

எத்தனை வருமை சுமையாய்
உன்னை வாட்டினாலும்,உன் கைகள்
சுமந்தது என்னவோ புத்தக சுமையைத் தான்!
அந்த யானையும் உன் கவிதையை
கேட்டிருக்கும் என்று நினைக்கிறேன்;
அந்த வியப்பில் தான் – உன்னை
தூக்கி மகிழ்ந்திருக்கும்; ஆனால்
அதற்கு தெரியுமா நடக்கும்
விபரீதம் என்ன? என்று

உள்ளத்தில் ஒளி உண்டானால்
வாக்கிலே ஒளி உண்டாகும் என்பர்- அதுபோல
நீ எங்கள் உள்ளத்தில் ஒளியாய் நின்று
எங்கள் வார்த்தையிலே ஒளிபொருந்திய
உணர்ச்சி கடலாய் வெளிப்படுகிறாய்!

தமிழே உன் உயிர் மூச்சு என்றாய்!
தமிழ் அன்னை எவ்வளவு காலம் தவமிருந்தாளோ?
உன்னை பெற்றெடுப்பதற்காக என்று தெரியவில்லை!

பாரதி பெண் சுதந்திரத்தின் போர் வாள் நீ!
தமிழுக்குச் செல்ல பிள்ளை நீ!
இந்த உலகை விட்டு உன் உடல் மறைந்தாலும்;
என்றும் எங்கள் மனதில் குடிகொண்டிருப்பவன் நீ!




3 கருத்துகள்:

  1. அருமையான பகிர்வு தோழி..தங்களின் தமிழ் எழுத்துகளை அன்போடு வரவேற்கிறேன்.தொடரட்டும் உங்கள் பதிவுகள் தோழி..

    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. பாரதியார் பற்றிய அருமையான கவிதைத் தோழி.

    பதிலளிநீக்கு