வியாழன், 18 பிப்ரவரி, 2016

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்


                        எண்ணும் எழுத்தும் கண்ணெனதகும்

முன்னுரை;

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு- வள்ளுவர்.

அதாவது இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்களைப் போல் என்கிறார் வள்ளுவர். எண்கள் என்றால் கணிதம். எழுத்து என்றால் தமிழ். ஆனால் எழுத்தை விரும்பும் அளவிற்கு யாரும் எண்ணை விரும்பவில்லை. நம் தாய்மொழியான தமிழில் கூட கணித எண்களை தமிழெண்கள் என அழகான தமிழில் கூறியுள்ளனர். பல வருடம் தொன்மையான தமிழ் மொழியில் கணிதம் பற்றி குறிப்பு உள்ளது என்றால் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாருங்கள்.

கணிதம் கடினமல்ல;

(சூத்திரம் + எண்கள்) = கணிதம்  என்பதுதான் கணித்தின் வறையரை.  கணிதம் கடினமானதோ, கனமானதோ அல்ல. சுலபமானது, எளிமையானது. இதை உணராதோரே கணிதம் கடினமானது என்பர்.  இன்று கணிதம் இல்லாத துறையே இல்லை. சொல்லப்போனால் கணிதம் இல்லாததது துறையே இல்லை.

கணித்தை வெறுக்கக் காரணமும் நாம் புரிந்து கொள்ள வேண்டியதும்;

கணிதத்தை வெறுக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் கூறுவர்.அவற்றில் சில,

முதல் காரணம் கணித ஆசிரியர் பிடிக்கவில்லை அதனால் கணிதம் பிடிக்கவில்லை என்பார்கள். இது வாழைப் பழத்தின் தோல் பிடிக்கவில்லை அதனால் வாழைப்பழம் பிடிக்கவில்லை என்பது போல் இருக்கிறது. கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் போதும். யாரையும் பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

அடுத்தது, அதிகமாக சிந்திக்க வைக்கிறது அதனால் பிடிக்கவில்லை என்பார்கள். நம் அறிவுக்கு அதிகம் வேலைக் கொடுப்பது கணிதம் மட்டுமே. எந்த வேலையும் செய்யாமல் புதுமையாக இருக்கும் மூளைக்கு அதிகம் வேலைக் கொடுப்பதாக கணிதம் இருப்பதால் தான் பிடிக்கவில்லை. பயன்படுத்தாத எந்த ஒரு பொருளும் எதற்கும் பயன்படாது. அவ்வாறு நம் மூளை எதற்கும் பயன்படாமல் போய்விடக்கூடாது என்பதே கணிதத்தின் நோக்கம்.

சூத்திரங்கள் அதிகமாக இருப்பது பிடிக்கவில்லை என்பார்கள். தமிழில் எவ்வாறு இலக்கண, இலக்கியமோ அதேபோல் தான் கணிதத்தில் சூத்திரமும், எண்களும். கஷ்டப்பட்டு படிப்பதை விடுத்து இஷ்டப்பட்டு படிக்க வேண்டும்.

கணித நோட்டை எடுத்தாலே தூக்கம் வருகிறது என்பார்கள்.

சிலர் கணிதம் படித்தால் தூக்கம் வரும் என்பார்கள்
நீங்கள் கணிதம் படித்தால்தான் தூக்கம் என்று சொல்லுங்கள்

இதில் ஏன் நீங்கள் இரண்டாவது நபராக இருக்கக் கூடாது.

கணிதத்தில் அதிகம் பிரச்சனையாக (problem) இருக்கிறது என்பார்கள்.  நாம் ஒரு பிரச்சனைக்கு (problem) தீர்வு காணும் போது இது சரியானதா என பலமுறை சிந்திப்போம்.  எவ்வாறு சங்க இலக்கியம் படித்தால் அறங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியுமோ? அதுபோலத் தான் கணிதம் படித்தால் எதிர்காலத்தில் நாம் சந்திக்க இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

இவ்வாறு நம்மிடம் இருக்கும் எதிர்மறையான (-)எண்ணங்களை விடுத்து நேர்மறையான (+) எண்ணங்களை வளரத்து கொள்வோம்.
இன்று நாம் உண்ணும் உணவிலிருந்து  உலகம் வரை எல்லாம் கணிதம் தான்.

ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை;

மாணவர்களில் மூன்று வகை உண்டு

1.உன்னால் முடியும் என்றால் நம்பிக்கை காரணமாக அதை செய்து முடிப்பது. இப்படிபட்டவர்களை ஊக்குவித்தால் மட்டும் போதும்.

2.உன்னால் முடியாது என்றால் என்னால் முடியும் என்று போட்டிப் போட்டுக் கொண்டு அந்த செயலை முடிப்பது. இவர்களை சற்று தூண்டிவிட்டால் 
போதும்.

3.நாம் என்ன சொன்னாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு அதில் ஆர்வம் இல்லை என்று அர்த்தம். அவர்களை நம்மால் எதுவும் செய்ய முடியாது.

முடிவுரை;

மற்ற பாடங்களுக்கும் கணிதத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மற்ற பாடங்களை கதைகளாகவும், படங்களாகவும் கொண்டு வர முடியும். ஆனால் கணிதத்தை புரிந்து கொண்டால் மட்டுமே வாழ்க்கையில் பயன்படுத்த முடியும். எனவே கணிதத்தை புரிந்து கொள்வோம் வாழ்க்கையில் பயன்படுத்துவோம்.

3 கருத்துகள்:

  1. அருமையான பதிவு நந்தினி. கணிதத்தின் சிறப்பை மிக அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்.
    கணிதம் குறித்த பலரது கருத்துக்களும் அதற்குத் தங்களின் மறுமொழியும் மிக நன்று.
    தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகளைத் தங்களிடமிருந்து எதிர்பாா்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா.உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  2. அருமை தோழி.எனக்கும் கணிதம் பிடிக்காது காரணம் சூத்திரங்கள் தான்.இனிமேல் நானும் அதை கற்றுக்கொள்ள போகிறேன்.நன்றி நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு