தோழி


நட்பை உணர வைத்த நண்பன் என்பேனா?

தோல்விகளில் தோள்கொடுத்த தோழி என்பேனா?

சந்தோசத்தை பகிர்ந்து கொண்ட சகோதரி என்பேனா?

கண்ணீரை துடைத்த காதலி என்பேனா?

என்னுடைய ஒவ்வொரு படியிலும் துணை

நின்ற துனைவி என்பேனா?

ஆலோசனை கூறிய அன்னை என்பேனா?

தளர்ச்சிகளில் தட்டிக் கொடுத்த தந்தை என்பேனா?

என்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் முன் நின்றவளே!

என்னை எனக்கு உணர வைத்த என்னவளே!

உன்னை நான் என்னவென்று சொல்வேன்?

நீ என்னில் கலந்தவள்! என் உயிரானவளாவாய்!

Comments

  1. கவிதை நன்றாகவுள்ளது கீர்த்தனா.

    ReplyDelete
  2. அருமையான கவிதை தோழி,தொடருங்கள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. அருமையான நட்பு கவிதை தோழி.

    ReplyDelete

Post a Comment