நாலடியார்                  நாலடியார்

முன்னுரை:


          பதினெண் கிழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்ததாக திகழ்வது நாலடியார். கற்போர்  உள்ளத்தில் எளிதில் பதியுமாறு சான்றுகளுடன் தெளிவாகவும் எடுத்துரைப்பது நாலடியார். பொருட்பால்,அரசியலில் கல்வி எனும் அதிகாரத்தில் இடம்பெற்ற பாடல்கள் இங்கு காண்போம்.

 கல்வி அழகு:

             
பாடல்:
                குஞ்சி அழகு, கொடுந் தானைக் கோட்டழகும்,
                மஞ்சள் அழகும், அழகு அல்ல; நெஞ்சத்து,
                நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்,
                கல்வி அழகு அழகு.
          
           பொருள்;  

            
     தலைமுடியைச் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல, மனதளவில் உண்மையாக நடந்து கொள்கிறோம் என்னும் நடுவு நிலைமையாம் ஒழுக்க வாழ்க்கையைத் தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகு ஆகும்.

Comments

 1. அழகை அழகுட எடுத்துரைத்தமைக்குப் பாராட்டுக்கள் கோமதி.

  ReplyDelete
 2. மிகவும் அழகாக அழகை பற்றி எடுத்து கூறியிருக்கிறிர் தோழி

  ReplyDelete
 3. மிகவும் அழகாக அழகை பற்றி எடுத்து கூறியிருக்கிறிர் தோழி

  ReplyDelete
 4. சூப்பர் ஜி சூப்பர்.கல்வி அழகே அழகு மா.வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. கல்வியின் அழகை அழகாக எடுத்துரைத்தாய் தோழி.

  ReplyDelete

Post a Comment