சனி, 27 பிப்ரவரி, 2016

தமிழ் இலக்கண வரலாறு


முன்னுரை
            தமிழ் நூல்களில் மிகப் பழமையாக விளங்கும் நூல் தொல்காப்பியம் ஆகும்.இதனை இயற்றியவர் தொல்காப்பியர்.இவரை சமணர் என்றும் சைவர் என்றும் கருதுவர்,மற்றும் பிற இலக்கண நூல்கள் அபிநயம்,யாப்பருங்கலம்,யாப்பருங்கலக்காரிகை,வச்சனந்திமாலை,நன்னூல் போன்ற இலக்கண நூலின் ஆசிரியர்கள் சமணர்கள் ஆவார்.

அபிநயம்
            அகத்தியரின் மாணவர் அவிநயரால் இயற்றப்பட்ட இலக்கணநூல் இது. இது அகவலாலும்,வெண்பாவலும் ஆனது.இந்த நூல் எழுத்து,சொல்,யாப்பு, பாட்டியல் பற்றி கூறும்.இதன் காலம் கி.பி.5அல்லது 6 ஆம் நூற்றாண்டு. யாப்பருங்கலவிருத்தி,வீருத்தி,வீரசோழியம்,நேமிநாதம்,மயிலைநாதர் உரை ஆகியவற்றில் 90-ஆம் மேற்பட்ட அவிநயனார் நூற்பாட்கள் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளன.இது முத்தமிழ் பற்றியதாக இருக்கலாம் என்பர்.
யாப்பருங்கலம்
            இதன் ஆசிரியர் அமிர்தசாகர்,குணசேகரர் என்றும் கூறுவர்.இந்த நூல் சந்தம்,தாண்டகம் ஆகியவற்றிற்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது.இது சூத்திப்பாவால் ஆன யாப்பு நூல்.இதன் காலம் 10-ஆம் நூற்றாண்டு.

யாப்பருங்கலங்காரிகை
            இதன் ஆசிரியர் அமிர்தசாகர்.இது கட்டளை கலித்துறையால் ஆனது.இதன் உரை ஆசிரியர் குணசாகரர்.``காரிகை கற்று கவிபானடலாம்’’. இதன் உரை ஆசிரியர் குணசாகரர்.காரிகை காலம் 10-ஆம் நூற்றாண்டு.
நேமிநாதம்
            22-ஆம் தீர்த்தங்கர் நேமிநாதர் பெயரால் இந்நூல் அமைந்தது. இதன் ஆசிரியர் குணவிர பண்டிதா.இதன் அதிகாரங்கள் எழுத்தும்,சொல்லும் 96-சூத்திரங்களை கொண்டுள்ளது.இதன் அளவு கருதி சின்னூல் என்பர்.

வச்சணந்திமாலை
            இதனை வெண்பா பாட்டியல் என்பர்.இந்த நூல் 96-வகை பிரபந்தங்கள்,மங்கள எழுத்து ஆகியன பற்றி கூறும்.மொழி,செய்யுள்,பொது எனும் மூன்று இயல்களை பெறும்.இதன் ஆசிரியர் குணவீர பண்டிதர்.அலர் தன் ஆசிரியர் அச்சணந்தி பெயரால் யாத்தார்.என்பர்.இதன்ர காலம் கி.பி.13-ஆம் நூற்றாண்டு.

நன்னூல்
            தொல்காப்பியம் இதன் முதல் நூல்.இருப்பினும் பல இடங்களில் மாற்றம் கொண்டுள்ளது.எளிமையும்,தெளிவும்,பகுப்பு வகைகளும் கொண்டுது. இதற்கு காண்டிகை உரை,விருந்தி உரை உள்ளன இந்த நூலுக்கு மயிலைநாதர்,சங்கரநமச்சிவாயர்,இராமானுஜ கவிராயர்,சிவஞானமுனிவர் போன்ற பல சமயத்தாரும் உரைகூறியுள்ளனர்.இதன் ஆசிரியர் பவணந்திமுனிவர்.இதன் காலம் 13-நூற்றான்டின் பகுதி ஆகும்.

நம்பியகப்பொருள்
            இந்நூலை அகப்பொருள் விளக்கம் என அழைப்பர்.இதன் ஆசிரியர் நற்கவிராசநம்பி அகம் பற்றிக் கூறும் இந்நூல் அகத்தினையில்,ஒழியல் எனும் ஐந்து இயல்களை கொண்டது.தஞ்சை வாணண் கோவை.இந்நூலின் துறைகளுக்கு ஏற்ற இலக்கியமாக,இயற்றப்பட்டது.

முடிவுரை

            இவ்வாறாக மேலே கூறப்பட்ட இலக்கண நூல்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு பெற்று சிறந்து விளங்குகின்றன.

6 கருத்துகள்:

  1. தமிழ் இலக்கண வரலாற்றை அழகாக எடுத்துக் கூறினீர்கள் ஜனனி.

    பதிலளிநீக்கு
  2. ஜனனி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம்பெற்றுள்ள. தமிழ் இலக்கணங்களின் வரலாறு பற்றிய இந்தப் பதிவு நம் கல்லூரி மாணவா்களுக்கு மட்டுமல்ல பெரியாா் பல்கலைக்கழக இணைவு பெற்ற மற்றும் பிற கல்லூரி மாணவர்களுக்கும் பெரிதும் பயன்படும். தமிழ் இலக்கிய வரலாற்றின் பிற பகுதிகளையும் தொடர்ந்து பதிவு செய்யவும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா அப்படியே செய்கிறேன் ஐயா மிக்க மகிழ்ச்சி

      நீக்கு
  3. வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுடா.பயனுள்ளதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு