சில நதிகளின் சிறப்பு..!!


 நதியின் செய்திகள்;


காக்ரா நதி

1.கோமதி,காக்ரா,கண்டகி,கோசி ஆகிய நதிகள் கங்கை நதியின் துணை நதிகள்.
கோசி நதி

2.சீலம்,சீனாப்,ராவி,பியாஸ்,சட்லெஜ் ஆகியவை சிந்து நதியின் துணை நதிகள்.

சீனாப் நதி

3.கோதவரி நதி தட்சிண கங்கை என்று அழைக்கப்படுகிறது.

ராவி நதி

4.மணலாறு என்று  அழைக்கப்படுவது பாலாறு.

சட்லெஜ்  நதி

5.காவிரியின் இன்னொரு பெயர் பொன்னி.


கோதாவரி  நதி


நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நகரங்கள்;
கங்கை  நதி

1.கங்கைக் கரையில் உள்ள மிகப்பழமையான நகரம் ஹரித்துவார்.

2.கோமதி நதிக்கரையில் லக்னோ அமைந்துள்ளது.

3.நர்மதை நதியின் மீது அமைந்த நகரம் ஜபல்பூர் ஆகும்.

 4.அயோத்தி நகரில் ஓடும் நதியின் பெயர் சரயு.
சரயு  நதி
5.கோதவரி நதியின் மீது அமைந்த நகரம் நாசிக்.

6.ஹூக்ளி நதியில் அமைந்த மிகப்பெரிய நகரம் கொல்கத்தா.
ஹுக்ளி  நதி


7.யமுனா நதிக்கரையில்  அமைந்துள்ளது  உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால்.
யமுனா  நதி

சில நதிகளின் படத்தை செருகியுள்ளேன் .இந்த நதிகளும் நமது இந்தியாவில் தான் உள்ளது.எத்தனை பேருக்கு தெரியும் இது..??

நடந்தால் ஆறு..!!எழுந்தால் அருவி..!! நின்றால் கடல்லலோ..!! சிறு நதிகளே..!!நதித்தொடும் கரைகளே..!! கரைத்தொடும் நுரைகளே..!! நுரைகளின் இவள் முகமே..!! நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே..!! 

இந்த பாடலில் கவிஞர் நதியின் அழகை சிறப்பாக பெண்ணோடு ஒப்பிட்டு கூறியுள்ளார்.நதி என்பது மங்கையின் அழகு என்பதையும்  நயப்பட கூறியுள்ளார்.

Comments

  1. நம் நாட்டில் இவ்வளவு அழகான நதிகள் உள்ளது என தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்லது தோழி.இன்னும் நம் நாட்டில் நமக்கே தெரியாத நிறைய இயற்கை வளங்கள் உள்ளன.தேடினால் தெரிந்துக் கொள்ளலாம்.

      Delete

Post a Comment