புதன், 20 ஜனவரி, 2016

எதிர் வீட்டு தேவதை .



பதினோராம் வகுப்பில்தான்

பார்த்தேன் அவளை

கல்லூரி நான் செல்கையில்

கையசைத்து சிரிப்பாள்….


புத்தக சந்தேகமென

பார்க்க வருவாள்

புரிய வைத்தபின்

புன்னகைத்து செல்வாள்


முத்தம் பெறுவதட்காக

முதல்முறை சொன்னேன்

மனமுடித்து கொள்வேனென்று

முத்தமும் கொடுத்தாள்..


பெண் பார்க்கும்

படலமும் தொடங்கிற்று

பாவமாய் சுற்றினாள்

பேதை பாவை


சாகாலத்தி சண்டையிட

சற்றும் நேரமில்லை

சட்டென்று எல் கே ஜி

சேரவேண்டும் என்பதினால்...!!!


2 கருத்துகள்:

  1. அட...
    தேவதையின் கவிதை
    என்பதால்
    ஆவலுடன்
    ஓடிவந்தேன்..

    அவள்
    முத்தப்பரிசுகளில்
    முழுவதுமாய்
    சொக்கி
    நின்றேன்.

    மெத்தக்கதை
    தொடருமென்று
    நான்
    காத்திருக்க...

    சட்டென்று
    முடித்துவிட்டார்...

    போங்கள்..
    நான்
    ஏமாந்தேன்..

    பொருளில்
    சில
    குறையுண்டு..

    பதினோறாம்
    வகுப்பில்
    பார்த்தபிள்ளை
    கல்யாணம் வரை
    பள்ளி
    போகாமலா
    இருந்தால்..

    அப்படியிருந்திருந்தால்
    அவள்
    பெற்றோரை
    தண்டித்தும்...

    பதினொன்று
    முடித்த
    பக்கத்தில்
    திருமணம்
    என்றால்

    இளவயது
    மணமென்று
    காவல்துறை
    போகவேண்டும்..

    எழுத்துப்பிழைகளிலும்
    கருத்து
    கொஞ்சம்
    வைத்தால்...

    நல்ல கவி ஒன்று...

    நமக்கு
    போட்டியென்று...

    கவிஞர்கள்
    பயப்படுவார்...

    வாழ்த்துக்கள்
    பெண்ணே....


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துக்கு நன்றி காலதாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் ஐயா..

      தங்களை சந்தித்ததில் பேரின்பம் அடைகிறேன் ஐயா..தங்கள் கவிதையை நான் இரசித்துப் படிப்பேன் எப்படி ஐயா நீங்கள் இவ்வளவு தமிழ் எழுத்துக்களை தேடி கண்டுப்பிடித்து எழுதுரீங்க ..??நான் மிரண்டு போயிட்டேன் ஐயா..

      நன்றி ஐயா..

      நீக்கு