ஞாயிறு, 10 ஜனவரி, 2016

பெயர் வந்தது எப்படி..??




எட்வர்டு எலியட்ஸ்   என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியின்  போது சென்னையில் நீதிபதியாக இருந்தவர்,அவருடைய பெயர் தான் எலியட்ஸ் சாலைக்கு சூட்டப்பட்டது..



உஸ்மான் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியில் கவர்னரின் ஆலோசகராக இருந்தவர்.அவர் இருந்த தெருவின் பெயர் தான் உஸ்மான் சாலை..



ஹென்றி சேமியர்ஸ்  என்பவர்  மெட்ராஸ் கிளப்பை நிறுவினார்.எனவே தான் அடையாற்றின் கரையில் இருக்கும் இந்தக் கிளப்பை நோக்கிச் செல்லும்  சாலைக்கு சேமியர்ஸ்  சாலை எனப் பெயர் பெற்றது.



பாந்தியன் என்ற பெயரில்  ஒரு தேவாலயம் எழும்பூரில் உள்ளது.அதனால் தான் அந்த சாலைக்கு பாந்தியன் சாலை எனப் பெயர் சூட்டப்படது..



இமம் என்ற சொல்லுக்கு பனி என்று பொருள்.இம்மலைகள் எப்பொழுதும் பனி சூழ்ந்து இருப்பதால் இதனை இமயமலை என்று அழைக்கப்பட்டது.

 சர் ஜார்ஜ் எவரெஸ்ட்  என்பரின் தலைமையில் இந்திய சர்வே குழு அச்சிகரத்தின் உயரத்தைக் கணக்கிட்டனர்.எனவே தான் அச்சிகரம் எவரெஸ்ட் என்று அழைக்கப்பட்டது..  

2 கருத்துகள்: